குடித்துவிட்டு கூத்தடித்தால் நடிகைகள் படுக்கையை பகிர்ந்துகொள்வார்களா என ரெஜினா பேசியிருக்கிறார்.
ரெஜினா தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சைடு ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
ரெஜினாவின் ஆவேசமான பேச்சு அடுத்தடுத்த படங்கள்: அந்தப் படத்தின் மூலம் அடையாளம் கிடைத்ததை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படிதான் அமைந்தது. அதன்படி அவர் ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, தலைவியில் கெஸ்ட் ரோல் என படங்களில் நடித்தார்.ஆனால் அவற்றில் ராஜதந்திரம், மாநகரம் தவிர்த்து மற்ற படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. அவர் கடைசியாக தமிழில் கருங்காப்பியம் படத்தில் நடித்தார். மேலும் அவரது நடிப்பில் பார்டர், ஃப்ளாஷ்பேக், சூர்ப்பனகை ஆகிய படங்கள் தமிழில் வெளியாகவிருக்கின்றன.
ரெஜினா பேட்டி: நடிகை ரெஜினா அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்திருப்பதாக கூறியிருந்தார். இந்த சூழலில் நடிகைகள் குடித்துவிட்டால் படுக்கையை பகிர்ந்துகொள்வார்களா என்று ஓபனாக பேசியிருக்கிறார். அதுகுறித்து அவர் பேசுகையில், “நடிகைகள் குடிக்கிறார்கள், போதையில் இருக்கிறார்கள், பார்ட்டி செய்து கூத்தடிக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆம் அது உண்மைதான்.
அதனால் அப்படி இல்லை: நடிகைகள் அப்படி இருப்பதால் அவர்கள் அனைத்துக்குமே சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது ரொம்பவே தவறு. அவருடைய வாழ்க்கையை அவர் கொண்டாடுகிறார். அந்த கொண்டாட்டத்தை அடிப்படையாக வைத்து அவரின் நடத்தையை நீங்கள் எப்படி கேள்விக்குறி ஆக்கலாம். அது தப்பு இல்லையா? படுக்கையை பகிர்வாரா?: நடிகை ஒருவர் குடிக்கிறார் என்ற காரணத்திற்காகவே அவர் உங்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வார் என்று நினைப்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம். அவர் தன் ஆண் நண்பருடன் படுக்கையை பகிர்கிறார் உங்களுடன் பகிரவில்லை என்றால் உங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம். உங்களை பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் ஒருவரின் தனிப்பட்ட உரிமை. மற்றவர்களுடன் அவர் அப்படி இருக்கிறார். என்னிடமும் அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதற்கு நீங்கள் யார்?.. உங்களை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை அவ்வளவுதான். அந்த நடிகையின் கேரக்டரை அடிப்படையாக வைத்து நீங்கள் அத்துமீறலாம் என்று நினைப்பது தவறான விஷயம்தான்” என்றார்.