SLT-MOBITEL ஆனது 2023 ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை வாடிக்கையாளர் சேவை வாரம் 2023 ஐ கொண்டாடியது. தனது வாடிக்கையாளர்களுக்கு பல விறுவிறுப்பான சலுகைகளையும், சேமிப்புகளையும் இக்காலத்தில அது அறிமுகம் செய்தது, புதிய வாடிக்கையாளர்களுக்கு வலையமைப்பின் வலிமையை அனுபவிக்க ஊக்குவிக்கின்றது.
ஹோம் மற்றும் மொபைல் இணைப்புகளின் புதிய மற்றும் ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவான சலுகைகள் மற்றும் டிஜிட்டல் அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
Home Broadband தீர்வுகளின் கீழ், SLT-MOBITEL இடமிருந்து புதிய இணைப்புகளுக்காக இலவச டேட்டா சலுகை வழங்கப்பட்டது. SLT-MOBITEL Fibre புதிய இணைப்புகளுக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 100GB போனஸ் டேட்டா மற்றும் 30 நாட்களுக்காக 100GB Entertainments Combo Pack வழங்கப்பட்டது. 4G LTE புதிய இணைப்புகளுக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 50GB போனஸ் டேட்டா மற்றும் Youth Add on ஆக 20GB டேட்டா 30 நாட்களுக்கும் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர் சேவை வாரத்தின் போது, வாடிக்கையாளர்களுக்கு மேலும் தெரிவு செய்யப்பட்ட சாதனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு 50% எனும் உயர் விலைக்கழிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.