உலக நாயகன் கமல்ஹாசன் மகளும், முன்னணி நடிகையுமான சுருதிஹாசன், பிரபாசுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘சலார்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ரசிகர்களுடனான கலந்துரையாடலில், ‘உங்களது தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து பாடல் பாடுவீர்களா?’ என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, “நிச்சயம் ஒரு இசை ஆல்பத்தில் இணையவுள்ளோம். விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்று சுருதி ஹாசன் தெரிவித்திருந்தார். துபாயில் நடந்த சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனும் இந்த தகவலை உறுதி செய்தார். ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் சுருதிஹாசனுடன் இசை படைப்பில் நான் இணைகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இசை ஆல்பத்துக்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. விரைவில் இந்த இசை ஆல்பம் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமல்ஹாசன்-சுருதிஹாசன் இணையும் இசை ஆல்பம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். சுருதிஹாசன் ஏற்கனவே ‘எட்ஜ்’, ‘ஷீ இஸ் எ ஹீரோ’ என்ற 2 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அவரது 3-வது இசை ஆல்பம் வெளிவர இருக்கிறது. ‘தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்திலும் சுருதிஹாசன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கமலுடன் சுருதிஹாசன் பாடிய இசை ஆல்பம்
1.2K