இது ஒரு நிறமற்ற ஜெலி வகை மீன் ஆகும். அளவில் சிறியதான இம் மீன் ஆழ்கடலில் திரிந்துகொண்டிருக்கும். உயிரியல் ரீதியில் மரணமே இல்லாத உயிரினம் இதுதான்! மனிதர்கள் குழந்தை பருவத்துக்கு திரும்பிச் செல்ல விருப்பப்படுவது போல இது தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளாமல் மீண்டும் முதல் பகுதிக்கு திரும்புகிறது.
சிறிய கருவாக இதன் வாழ்க்கை தொடங்குகிறது. அந்த லார்வா நிலைக்கு லனுலா (planula) என்று பெயர். இந்த லார்வா வண்ணத்துப்பூச்சி உருவாவதற்கு முன்னர் புழு குளத்தில் அடைபடுவது போல தரையில் மூடிக்கொள்கிறது. அங்கிருந்து benthic polyps உருவாகிறது. இது தரையில் நிலைத்திருக்கும், இதன் உச்சியில் வாய் இருக்கும். தாவரம் போன்ற இதிலிருந்து தான் ஜெலி மீன்கள் வாழ்வின் அடுத்த கட்டமான ephyra உருவாகிறது. ephyra வளர்ந்து medusa என்ற மூப்பான இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட ஜெலி மீன்கள் உருவாகிறது.
medusa நிலையை மனிதர்களுக்குப் பொருத்தினால் இதன் பின்னர் தேய்மானம் அடைந்து மரணம் ஏற்பட்ட வேண்டும். ஆனால், இவற்றுக்கு அவ்வாறு ஏற்படுவதில்லை. மாறாக இவை அதற்கு மேல் வளராமல் நிலைத்திருக்கும். காயம் காரணமாகவோ அல்லது உணவு இல்லாமல் போகும் சூழலியல் அழுத்தம் காரணமாகவோ இவை பாதிக்கப்பட்டால் மீண்டும் சிறிய திசுவாக மாறி லார்வா நிலைக்குத் திரும்புகின்றன.
இவ்வாறு இந்த ஜெலி மீன்கள் மரணமற்றவையாக இருக்கின்றன. இவற்றை மற்ற உயிரினங்கள் தாக்கி கொல்லலாம், ஆனாலும் மீண்டும் லார்வாவாக மாறும் திறனால் இவை அழியாமலிருக்கின்றன.
மரணத்தை கடந்த உயிர்கள் பிரபஞ்சத்தின் பிரமிப்புகள், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தங்களை தக்கவைத்துக்கொள்கின்றன.