நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன்-2′ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமலின் அடுத்த படத்தை எச். வினோத் இயக்குகிறார். நடிகர் கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 233-ஆவது படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் முழுக்க முழுக்க சமூக அக்கறைக் கொண்ட அரசியல் படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கும் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கி பயிற்சியுடன் வெறித்தனமாக தயாராகுகிறார். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
வெறித்தனமாக அடுத்த படத்திற்கு தயாராகும் கமல்
1.6K
previous post