பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களின் விலை குறைப்பு | தினகரன் வாரமஞ்சரி

பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களின் விலை குறைப்பு

நாட்டில் நிலவும் இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக புத்தம்புதிய வாகனங்கள் இலங்கையில் இல்லாதிருக்கும் சூழ்நிலையில் தம்மிடம் காணப்படும் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள வாகனத்தை உரிய வகையில் பராமரிப்பதற்கே அனைவரும் முன்னுரிமையளித்துள்ளனர்.
 
இதற்கு உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் அவசியமாகின்றபோதும், கடந்த சில மாதங்களில் நாணயமாற்று வீதத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சகல வகையான வாகனங்களினதும் அசல் உதிரிப்பாகங்களின் விலை அதிகரித்துள்ளன.
 
இதற்கிடையில் விற்பனையின் பின்னரான சேவைக்காக அர்ப்பணிப்புடன் உள்ள டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் இந்நாட்டில் பஜாஜ் வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருப்பதுடன், பஜாஜ் ஜெனுயின் ஸ்பெயார் பார்ட்ஸ் விலைகளைக் கணிசமானளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடேட் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள்) உதித் விஜேதுங்க குறிப்பிடுகையில், பஜாஜ் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு எப்பொழுதும் தேவைப்படும் உதிரிப்பாகங்கள் பலவற்றின் விலையைக் குறைப்பதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
 
பஜாஜ் வாகனங்களைத் தயாரிக்கும் இந்தியாவின் பஜாஜ் ஓட்டோ லிமிடெட் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உதிரிப்பாகங்கள் ஏக முகவரான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் மற்றும் நிறுவனத்தின் டீலர்களால் மாத்திரமே இந்நாட்டில் விநியோகிக்கப்படுவதுடன், விற்பனை செய்யப்படுகின்றன.
 
இதனால், வாடிக்கையாளர்கள் தமது வாகனங்களை எப்பொழுதும் பிரான் நியூ போன்று பேணுவதற்கு ஜெனுயின் பார்ட்ஸ் மாத்திரம் பயன்படுத்துமாறு நிறுவனம் பணிப்புரை விடுத்துள்ளது.
 
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் மற்றும் டீலர்கள் நாடு முழுவதிலும் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதுடன், மற்றும் பஜாஜ் ஜெனுயின் பார்ட்ஸ் பெயர் பலகைகள் மூலம் இவற்றை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

Comments