நெருக்கடிக்கு மத்தியிலும் லிற்ரோ வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு கோழிப்பண்ணை, பேக்கரி சங்கங்கள் பாராட்டு | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடிக்கு மத்தியிலும் லிற்ரோ வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு கோழிப்பண்ணை, பேக்கரி சங்கங்கள் பாராட்டு

இலங்கையின் எரிவாயுத் துறையின் முன்னணியாளரான லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம், அந்நிய செலாவணிப் பற்றாக்குறையின் காரணமாக சில மாதங்களாகக் காணப்படும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையினால் உணவு மற்றும் குடிபானத்தொழில்துறைக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பில் மறுலமர்ச்சியைக் கண்டுள்ளது.

உணவகத் தொழில்துறை மீண்டும் சுமுகநிலைமைக்குத் திரும்பியுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்த லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் மீண்டும் தமது சொந்தக் காலில் நிற்க முடிந்திருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

எரிவாயுப் பற்றாக்குறை காரணமாகத் தமது செயற்பாடுகளை இடைநிறுத்தியிருந்த பல வணிகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்துறையினர் மற்றும் சந்தையின் முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கும் வகையில் இடையறாத எரிவாயு விநியோகத்தை உறுதிசெய்ய நாம் முயற்சிக்கின்றோம்” என்றார். உலக வங்கியின் நிதியுதவியுடன் 100,000 மெற்றிக்தொன் திரவப் பெற்றோலிய வாயுவை இறக்குமதி செய்து நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதை இல்லாமல் செய்த முதலாவது அத்தியாவசிய சேவையாக லிற்றோ திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதானமான போட்டியாளர் தனது செயற்பாட்டைத் தற்காலிகமாக இடைநிறுத்திவைத்திருக்கும் நிலையில் லிற்றோ தனியாளாக நின்று 20 நாட்களுக்குள் 2.2 மில்லியன் சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.

அதேநேரம், லிற்ரோ தொடர்பில் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே..ஜயவர்த்தன குறிப்பிடுகையில், “கடந்த சில மாதங்கள் சிரமம் மிகுந்ததாகக் காணப்பட்ட நிலையில் லிற்றோ நிறுவனம் முன்வந்து இடையறாத எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தியமை பாராட்டத்தக்கது.

எரிவாயு நெருக்கடி காணப்பட்ட சமயத்தில் கூட மொத்தத் தேவையில் 50 வீத விநியோகத்தை லிற்றோ உறுதிசெய்திருந்தது. போட்டியாளர் , மாற்று விநியோகஸ்தர் தனது செயற்பாட்டை இடைநிறுத்தியிருந்தபோதும் எம்மைக் காப்பாற்ற லிற்றோ முன்வந்தமைக்காக நாம் கடமைப்பட்டுள்ளோம்.

தற்பொழுது இந்தப் பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யக் கூடிய வகையில் பேக்கரி உற்பத்திகளை உறுதியாகப் பேணுவதற்கு உதவும் வகையில் தொடர்ச்சியாக எரிவாயு விலையை லிற்றோ குறைத்தமைக்காக நாம் நன்றி தெரிவிக்கின்றோம்” என்றார்.

Comments