அதிகரித்துவரும் உள்ளூர் தேவைக்கு இலங்கையில் தயாரிக்கப்பட்ட டயர் | தினகரன் வாரமஞ்சரி

அதிகரித்துவரும் உள்ளூர் தேவைக்கு இலங்கையில் தயாரிக்கப்பட்ட டயர்

இலங்கை வாகனத்துறையில் முன்னணிப் பெயரைக் கொண்டுள்ள AMW, பயணிகளின் வாகனத்துக்காக மெருகூட்டப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள AMW - EPIC டயர்களை வெளியிடுவது தொடர்பான அறிவிப்பை அண்மையில் மேற்கொண்டிருந்தது.

AMW இன் புதுப்பிக்கப்பட்ட இந்த முயற்சியின் மூலம் நுகர்வு மற்றும் வணிகப் பிரிவுகளில் உள்ள வாகனச் சாரதிகள், குறிப்பாக விலை மற்றும் தரத்தில் பார்வையில் பெரும் நன்மையடைவார்கள். உள்நாட்டு டயர் சந்தையில் பற்றாக்குறை காணப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் இதயபூர்வமான AMW - EPIC டயரானது மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையும் என AMW நம்பிக்கை கொண்டுள்ளது.

பரந்த அளவிலான நுகர்வோர் மற்றும் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், AMW ஆனது நவீன உற்பத்தி முறைமை, முகாமைத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்கூட்டர்கள் (Yamaha Ray ZR, Honda Dio, TVS Scooty Pept & Ntorq) மோட்டார் சைக்கிள்கள் (Yamaha FZ, Suzuki GN 125, Bajaj Discovery, CT 100 & Pulsar), முச்சக்கரவண்டிகள் (Bajaj, TVS, Mahindra & Piaggio) மற்றும் ஏனைய இலகுரக வாகனங்கள் (Tata Dimo Batta & Mahindra Maxximo) போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் வகையில் டயர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. AMW - EPIC ஐ வேறுபடுத்தும் ஒரு அம்சமாகப் பயன்படுத்துபவர்கள் ஒரு லீட்டர் பெற்றோலில் அதிக தூரம் பயனிக்கக் கூடிய தன்மை காணப்படுகிறது. இது தற்பொழுது காணப்படும் சூழலில் மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதாகவும் அமைகிறது.

அத்துடன் இந்த டயர்கள் அதிர்வு மற்றும் தள்ளாட்டத்திற்கு எதிராக 100 வீத சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன், திருப்பங்கள் மற்றும் பிரேக் பிடித்தல் ஆகியவற்றின் போது சிறந்த பிடிமானத்தையும் இது வழங்குகிறது.

Comments