2022 க்கான இலக்குக் கொண்ட சந்தைப்படுத்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள இலங்கை சுற்றுலா கூட்டமைப்பு | தினகரன் வாரமஞ்சரி

2022 க்கான இலக்குக் கொண்ட சந்தைப்படுத்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள இலங்கை சுற்றுலா கூட்டமைப்பு

இலங்கை சுற்றுலாக் கூட்டமைப்பு (SLTA) குளிர்கால முன்பதிவுகள் மூலம் பல்வேறு வழிமுறைகளில் இலங்கையை உலகளவில பிரபலமடையச் செய்ய இலக்கு வைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. 

பெரும்பாலான நாடுகள் இலங்கைககான பயணத் தடையை நீக்கிய போதும், முக்கிய சந்தைகளில் உள்ள பயணிகளுக்கு நாடு ஸ்திரத்தன்மைக்குத் திரும்பியமை அறிவிக்கப்படவில்லை என்பதால் இது ஒரு முக்கியமான தேவையாகும். 

பிரசாரம் முதன்மையாக டிஜிட்டலில் மேற்கொள்ளப்படுகின்றது, பயண கொள்முதல் முடிவின் சகல பகுதிகளையும் உள்ளடக்கியது. இலங்கைக்கு வரக்கூடிய பயணிகளே முதன்மையான இலக்குக் கொண்ட குழுவாக உள்ளனர். ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் என்பனவே ஆரம்பத்தில் இலக்கு வைக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து வளைகுடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்தோர் இலக்கு வைக்கப்படுவர், 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் டிஸ்ப்ளே வலையமைப்பு மற்றும் யூடியூப் வீடியோ ப்ரீ-ரோல் விளம்பரங்கள் உள்ளிட்ட பல தளங்களில் நுகர்வோர் பிரசாரம் அடுத்த மூன்று மாதங்களில் முன்னெடுக்கப்படும். இதற்கான பிரசாரத்தின் கருப்பொருள், ‘மீண்டும் காதலில் விழுதல்’ என்பது, ‘'இலங்கையைக் காதலித்தல்' என்ற பெரிய கருப்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தனித்துவமான முக்கிய கூறுகளுடன் இவ்வுள்ளடக்கமானது வழக்கமான அடிப்படையில் புதுப்பிக்கப்படும். 

மேலதிகமாக, தனித்தனியான காரணத்துடன் சமூக வலைத் தளங்களில்‘இலங்கையை நேசிப்பதற்கான 100 காரணங்கள்’ பிரசாரத்தை தொடங்கும். ஹைகிங், சர்ஃபிங், தேநீர், வனவிலங்குகள், உணவு வகைகள் மற்றும் பல பார்வையாளர்களுக்கு உணவளிக்கும் பல்வேறு கூறுகளில் பிரசாரம் கவனம் செலுத்தும். ஒவ்வொரு இடுகையும் இலங்கையைக் கருத்தில் கொள்ளக்கூடிய வெவ்வேறு பார்வையாளர்களையும் முக்கிய இடங்களையும் குறிவைக்கும் வகையில் #lovesurfing போன்ற தலைப்புடன் குறியிடப்படும்.  

Comments