எசட்லைன் பினான்ஸ் லிமிடெட்டாக மாற்றம் பெற்றுள்ள எசட்லைன் லீசிங் | தினகரன் வாரமஞ்சரி

எசட்லைன் பினான்ஸ் லிமிடெட்டாக மாற்றம் பெற்றுள்ள எசட்லைன் லீசிங்

இலங்கையின் மிகப்பெரிய விசேட லீசிங் கம்பனியான எசட்லைன் லீசிங் கம்பனி லிமிடெட் நிறுவனம் இலங்கை மத்தி வங்கியின், வங்கி அற்ற நிதி நிறுவனத்துறையை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ் நிதி கம்பனிக்கான அனுமதிப்பத்திரத்தை அண்மையில் பெற்றுக் கொண்டது. இதற்கமைய இந்நிறுவனம் “எசட்லைன் பினான்ஸ் லிமிடெட்” (எசட்லைன்) என அறியப்படும். கிராமிய மற்றும் குறைந்த வருமானத்தைக் கொண்டவர்கள் முச்சக்கரவண்டிகள், இரு சக்கரவண்டிகள் மற்றும் சிறிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான லீசிங் வசதியை வழங்குவதற்காகவே இந்நிறுவனம் ஆரம்பத்தில் நிறுவப்பட்டது. எனினும்,; இந்நிறுவனத்தின் செயற்படும் எல்லையை விஸ்தரித்து சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் வரை தனது தயாரிப்புக்களை விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள 55 கிளைகள் மற்றும் 24ஃ7 செயலிலுள்ள ஈஸி பே வலையமைப்பின் ஊடாக கவனிக்கப்படாத தரப்பினருக்குத் தேவையான நிதியளித்தல் மற்றும் அணுகலை வழங்குவது என்ற நோக்கத்தை நிறுவனம் உண்மையுடன் நிறைவேற்றி வருகிறது.  
 
முதலிலும் கடைசியிலும் உள்ள போக்குவரத்தை எளிதாக்குவதில் எப்பொழுதும் முன்னணியில் இருந்துவரும் எசட்லைன், மேலும் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த நிர்வாகம், நெறிமுறைகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் குறைபாடற்ற சாதனையைப் பெற்றுள்ளது. விஸ்தரிக்கப்பட்ட தனது வலையமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்ட பொருளாதார கேந்திரநிலையங்களுக்கும் அப்பால் சேவையை விஸ்தரித்திருப்பதில் எசட்லைன் முன்நிலை வகிக்கிறது. சாதாரண மக்களின் வாகனங்களுக்கு நிதியளிப்பது, வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு லீசிங் வழங்கி தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிறிய தொழில்நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது நிறுவனத்தின் வெற்றியின் அடையாளமாக மாத்திரமன்றி, கிராமப்புற வளர்ச்சிக்கான முக்கிய ஊக்கியாகவும் காணப்படுகிறது.  

Comments