Ninewells வைத்தியசாலையில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி | தினகரன் வாரமஞ்சரி

Ninewells வைத்தியசாலையில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி

பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்கான முன்னணி வைத்தியசாலையான Ninewells ஹொஸ்பிட்டலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 குழந்தைகள் பிரசவித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுஅண்மையில்  நடந்தேறியது.

கொழும்பைச் சேர்ந்த கே. ரஞ்சிதன் தம்பதிகள்  Ninewells வைத்தியசாலையின் சேவைகளில் கொண்டிருந்த நம்பிக்கை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 22ஆம் திகதி இவர்களின் 12ஆவது குழந்தை கொழும்பிலுள்ள Ninewells ஹொஸ்பிட்டலில் பிரசவித்திருந்தது.

வைத்திய நிபுணரான நிலான் காலிதாச ரொட்ரிகோவின் மேற்பார்வையின் கீழ் இந்த பிரசவம் இடம்பெற்றதுடன், இந்த ஆண் குழந்தையின் ஏனைய சகோதர சகோதரிகளும்  Ninewells ஹொஸ்பிட்டல்சில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்ப துறையில் கணக்காளராக பணியாற்றும் மிதிலா ரஞ்சிதன் மற்றும் அவரின் வாழ்க்கைத் துணை, நீண்ட காலமாக Ninewells வைத்தியசாலையினால் வழங்கப்படும் சேவைகளின் மீது அதிகளவு நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
இந்தப் பிரசவம் தொடர்பில் ரஞ்சிதன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது இரண்டாம் பிள்ளையின் பிரசவத்துக்காக நாம் Ninewells வைத்தியசாலைக்கு வந்தோம், ஏனெனில் இங்கு விசேடத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் காணப்படுகின்றனர். பிரசவசார் சுகாதாரம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொடர்பில் நீண்ட அர்ப்பணிப்பை இவர்கள் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் எமது நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்திருந்தது.

வைத்தியசாலையின் ஒவ்வொரு பகுதியின் அபிவிருத்தியின் காரணமாக வைத்தியசாலையின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்க்கப்பட்டுள்ளது.” என்றார்.

குழந்தைப் பிரசவ வைத்திய நிபுணரான நிலான் காளிதாச ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “ரஞ்சிதனுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், எமது தொடர்ச்சியாக கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இவர்களின் நம்பிக்கை என்பது நாம் எய்தக்கூடிய உயர் விருதாகும். குறிப்பாக, பிரசவ மற்றும் குழந்தைப் பராமரிப்பு பிரிவின் சிறந்த சேவைத் தரங்களை இது காண்பிக்கின்றது.

பிரத்தியேகக் குறிப்பாக, இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பில் அங்கம் வகிப்பதையிட்டு நான் மிகவும் பெருமையாக உணர்கின்றேன்.” என்றார்.

Comments