தமிழ், சிங்கள புத்தாண்டை வரவேற்கும் வகையில் Sun Siyam பாசிக்குடா தமது ஹோட்டல் வளாகத்தில் விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. புத்தாண்டு பிறப்பு தினமான ஏப்ரல் 13ஆம் திகதி, சுப வேளையில் வாண வேடிக்கைகளுடன், தங்கியிருந்த விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களோடு, முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றிருந்தனர். கிழக்கில் சுற்றுலாவுக்கான புதுப்பிக்கப்பட்ட எதிர்பார்ப்பு வழங்கப்பட்டதுடன், சுபீட்சமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அண்மையில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலினூடாக, இலங்கையின் பாரம்பரிய பலகாரங்கள் பல, காலை உணவு வேளைக்காக பரிமாறப்பட்டிருந்தது. இதன்போது அவற்றைத் தயார்ப்படுத்துவது தொடர்பான நேரடி விளக்கமும் சமையல் நிபுணரால் வழங்கப்பட்டிருந்தது. ஐஸ்கிறீம் சைக்கிள் மற்றும் இளநீர் வழங்கும் பகுதி போன்றன இதில் அடங்கியிருந்தன. ஹோட்டல் வளாகத்தினுள் காணப்படும் உயர்ந்த தென்னை மரங்களிலிருந்து பெறப்பட்ட தேங்காய்களிலிருந்து பெறப்பட்ட இளநீர் இங்கு பரிமாறப்பட்டிருந்தது.
அந்நாளில் பல்வேறு புத்தாண்டு விளையாட்டுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் யானைக்கு கண் வைப்பது (அலியாட்ட அசெ திபீம), பானை உடைப்பு (வாசனா முட்டிய பிந்தீம), கயிறு இழுத்தல் (கம்ப அதீம), இசைக் கதிரை (சங்கீத புடு தரங்கய), சாக்கு ஓட்டம் (கோணி ரேஸ்), யோகட் ஊட்டல் (யோகட்ட கெவீம), பலூன் உடைத்தல் (பலூன் பிப்பிரீம) போன்றன அடங்கியிருந்தன.