36
பஞ்சம் பட்டினி
பாரினிலிருந்து விரண்டோட
பணமும் ஏழையும்
பாசத்தால் கொண்டாட
பணிவும் கனிவும்
பாடமாய் நின்றாட
படைத்தவனைக் கேட்கிறோம்
கிழக்கு வெளுக்காதா
பாதை மாற்றிடும்
போதை அழிந்திட
பேதை யவளும்
பயமின்றி வாழ்ந்திட
பாவங்கள் மறைந்தே
பயணங்கள் நன்மையாக
பழிக்குப்பழியும் அகன்றிட
கிழக்கே வெளுக்காதா
அனாதை இல்லங்களும்
ஆளின்றி வெறுமையாக
அல்லல்படும் பெற்றோரும்
அன்பினால் நிறைவாக
அகத்தினில் இன்பம்
அனைவருக்கும் உயிராக
அரும்பும் தளிருக்காகவும்
கிழக்கே வெளுக்காதா…
ஊரும் உலகும்
செழிப்பாய் மலர
உழைப்போர் வாழ்வும்
உன்னதத்தில் திகழ
உயரம் தொட்டே
களிப்பில் மகிழ
கிழக்கே வெளுத்திடு
இடரைத் தொலைத்திடு..!