இலங்கையில் கல்வியில் முக்கிய பிரச்சினையாக இருப்பது டியூஷனாகும். பாடசாலை பாடத்திட்டத்தை கற்பிக்க போதிய ஆசிரியர் குழு இருந்த போதிலும், டியூஷன் மாஃபியாவின் அளவினைக் கணக்கிட்டால் அது மிகப் பெரியதாகும். இதனால் இலவசக் கல்வி நாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி பெற்றோர்களுக்கு எழுந்துள்ளது. இன்று தனியார் வகுப்புகளால் உயர்தர வகுப்புக்களுக்கு மாணவர்களில் வருகை இல்லாமல் போயுள்ளது. இது தொடர்பில் நாம் தொடர்ந்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றோம். மாணவர்களைப் பாடசாலைகளுக்கு வரவைப்பதற்கு இருக்கும் திட்டங்கள் தொடர்பில் நாம் தேடிப் பார்த்தோம். தனியார் கல்வி எனும் மாபியாவின் பலம் எந்தளவுக்கானது எனக் கூறினால், இவர்கள் கடைசியில் பிரநிதித்துவம் செய்வது பாராளுமன்றத்தையாகும். இதன் தாக்கம் அந்தளவுக்கு அதிகமானதாகும். இவர்கள் சமூகத்தில் அதிக பலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கையின் கல்வி, பரீட்சையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தகுதி அடிப்படையிலான பாடத்திட்டத்தில் இருந்து ஒரு விலகியது பரீட்சை முறையினாலாகும். இந்நிலையை மாற்றுவதற்கு இந்த மாஃபியாதான் இடமளிக்காமல் தடுக்கின்றது. இவ்வாறான நிலையில், அரசியல்வாதிகள் இந்த டியூஷன் முறையினை மாற்றப் போவதில்லை என பகிரங்கமாகவே உறுதியளிக்கின்றனர். மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்களைக்கூட இதற்குள் தள்ளும் அளவுக்கு இந்த மாஃபியா வலுவாகிவிட்டது. டியூஷன் கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். இன்று டியூஷன் போகாவிட்டால் சித்தியடைய மாட்டோம் என்ற மனநிலையில்தான் இன்றைய மாணவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த டியூஷன் இன்று ஒரு ஃபேஷனாக ஆகிவிட்டது. எனவே, மாணவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறோம். கல்வியில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
மாற்று வழிதேடுவோரும் டியூஷனையே நாடுகின்றனர்
110