ஜப்பானில் தொழில்வாய்ப்பை பெற்று ஜப்பானிய கனவை நனவாக்க மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.
மன்னாரில் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவை நேற்று (20) ஆரம்பமாகியதுடன், அங்கு இன்றும் (21) நடைபெறுகிறது.
ஜப்பானில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பை வழங்கும் (SSW) Specified Skilled Worker வீசா திட்டம், ஜப்பானிய கனவை நிறைவேற்றுவதற்கான பல சட்டப் பொறிமுறைகளினூடாக சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், அப்பணியகம் தெரிவித்தது.
மலர்ந்துள்ள சித்திரைப் புத்தாண்டில் இலங்கையரின் கனவு நாடாக ஜப்பான் மாற்றமடைந்துள்ளது. அதன்படி ஜப்பானில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பை வழங்கும் SSW ( Specified Skilled Worker) வீசா திட்டம் இலங்கையரின் ஜப்பானிய கனவுகளை நிறைவேற்றுவதற்கான பல சட்டப் பொறிமுறைகளினூடாக சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
எனவே இப்போதே இலங்கையர் ஜப்பானில் தொழிலுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் நடத்தப்படும் கூட்டுப் பரீட்சை திறன் மற்றும் ஜப்பானிய மொழிப் புலமையை உறுதிப்படுத்தும்.
தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஜப்பானில் 05 ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு உள்ளது. SSW திட்டத்தின் கீழ் ஜப்பான் 14 வேலைவாய்ப்பு பகுதிகளை அறிவித்துள்ளது, அதில் 06 பகுதிகளுக்கு இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1. செவிலியர் பராமரிப்பு (Nursing Caregiving),
2. உணவு சேவை தொழில் (Food Service Industry)
3. விவசாயம் (Agriculture)
4. நிர்மாணத்துறை பிரிவு (Construction)
5. கட்டடத்தை சுத்தம் செய்தல் (Building Cleaning),
6. விமானத்துறை (Aviation Firld)
ஜப்பானில் வேலைக்கு விண்ணப்பிக்க முக்கியமாக தேவைப்படும் அடிப்படைத் தகுதிகள்:
18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை பிரஜையாக இருத்தல். Japan Foundation Test for Basic Japanese (JFT) அல்லது (JLPTN 4) JLPT N4 Study Guide: grammar list & practice test இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்றுறை தொடர்பாக நடத்தப்படும் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தாதியர் இரண்டு தாதியர் தொழில்நுட்ப அறிவுக்கான திறன், ஆங்கிலம் அல்லது ஜப்பான் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக சிறந்த தேகாரோக்கியம் இருப்பதுடன், உடலில் பச்சை குத்தி இருக்கக்கூடாது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி தகைமைகளை பெற்றிருந்தால் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே அதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கி வருகிறது.