முன்மாதிரியான இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில், Child Fund ஸ்ரீலங்காவுடன் இணைந்து உள்ளுர் இலங்கைப் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் முகமாக ஒரு உற்சாகமான போட்டியை சமீபத்தில் நடத்தியது.
அந்த வகையில் அவர்கள் நடத்திய She-roes போட்டியானது, இலங்கையில் முன்மாதிரிகளாகவுள்ள பெண் சாதனையாளர்களை அங்கீகரித்து மதிப்பளிப்பதோடு, பெண்களை பாராட்டி ஊக்குவிக்கிறது.
பெண்கள் கல்விக்கான ஆங்கிலம் மற்றும் டிஜிட்டல் (EDGE) திட்டம், சக குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த முன்மாதிரிப் போட்டி அதன் கழக உறுப்பினர்களுக்கு உத்வேகமாக அமைந்ததுடன் அவர்களை கனவு காணவும் மேலும் உயரத்திற்குச் செல்லவும் தூண்டியது.
இதன் பரிசளிப்பு விழா 22 மார்ச் 2024 அன்று கொழும்பில் உள்ள டவர் ஹோல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு இலங்கை முழுவதிலும் உள்ள EDGE கழக உறுப்பினர்களின் திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தியதோடு, உள்ளுரில் முன்மாதிரியாகவுள்ள பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் சமூகங்களில் அவர்கள் ஏற்படுத்தும் சிறந்த செயற்பாடுகளையும் அங்கீகரித்தது. இலங்கையின் முதல் பார்வைக் குறைபாடுடைய ஆடை வடிவமைப்பாளர் எனப் புகழப்படும் நயனா ஆஷ்சார்யா இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பெண்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்மாதிரிகள் தாய்மார்கள், சகோதரிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு பெண்ணும் தங்களின் முன்மாதிரியைத் தேர்ந்தெடுத்து சித்தரிக்கும் பணியை மேற்கொண்டனர்.