258
கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு ஆரம்பிக்கப்பட்ட ‘கெலிப்சோ’ விசேட சுற்றுலா ரயில் பயணத்தில் நேற்று முன்தினம் (05) தெமோதர செல்லும் வழியில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவும் இணைந்துகொண்டார்.
அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க உள்ளிட்ட பலரும் இப்பயணத்தில் இணைந்துகொண்டனர்.