டென்மார்க்கில் புலம்பெயர் தமிழரான இளம் பொருளியல் நிபுணர் அலன் தருமனுக்கு உயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இளம் பொருளியல் நிபுணராக அலன் தருமன் உள்ளார்.
இந்நிலையில் உலகின் முன்னணி பொறியியல், கட்டடக்கலை நிறுவனமான ரம்போல் நிறுவனத்தின் குழு பொருளியல் வியூக இயக்குநராக ராம்போல் குழுமத்தில் அலர் தருமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டென்மார்க்கின் பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு பங்களிப்புகளை நல்கிவரும் அலன் தருமன், அந்நாட்டு அரசாங்கத்தினதும் பல்வேறு உயர் பொருளாதார நிறுவனங்களினதும் ஆலோசகராக பணியாற்றுகிறார்.
பொருளியலிலிலும் அரசியல் விஞ்ஞானத்திலும் சிறப்பு முதுமாணி கற்கை, பொருளியல் மூலோபாய கற்கை உள்ளிட்ட கற்கைகளை நிறைவு செய்துள்ளார்.
அலன் தருமனின் மதிநுட்பமான பொருளியல் அறிவை டென்மார்க் அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்தி வருவது தமிழருக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவமாகும். புலம்பெயர் தமிழரும் டெனிஸ் இலக்கியத்தை தமிழுக்கு கொண்டு வந்தவருமான தருமன் தர்மகுலசிங்கத்தின் புதல்வரே அலன் தருமன் ஆவார்.
சர்வதேச ரீதியில் பொறியியல், கட்டடக்கலையில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாகவும் ஆலோசனை நிறுவனமாகவும் இயங்கிவரும் ரம்போல் நிறுவனம், 1945ஆம் ஆண்டு டென்மார்க்கில் நிறுவப்பட்டது.
35 நாடுகளுக்கு தன்னுடைய சேவையை விஸ்தரித்துள்ள ரம்போல் நிறுவனம், இலட்சக்கணக்கானவர்களுக்கு தொழிவாய்ப்பு வழங்கி வரும் உலகளாவிய முன்னணி நிறுவனமாக உள்ளது. நிலையான சமூகங்களை உருவாக்குவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உலகளாவிய அறிவுத் தளத்துடன் ஆழமான உள்ளூர் நுண்ணறிவு மற்றும் அனுபவத்தை உலகத்துடன் இணைத்து பயணிப்பதே இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். (மேலதிக விபரம் 22ஆம் பக்கத்தில்)