இந்தியாவின் சென்னைக்கும் யாழ். பலாலிக்கும் இடையே விமானங்களை இயக்க இண்டிகோ எயார் லைன்ஸ், இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. கொவிட்-19 காலத்தில் யாழ். பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக்கு தடை ஏற்பட்டது.
இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்தவுடன் தனது விமான சேவையை நிவாரண விமான சேவையாக ஆரம்பிக்கப்படுமென IndiGo எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
IndiGo எயார் லைன்ஸ் தற்போது கட்டுநாயக்காவுக்கும் சென்னைக்கும் இடையில் விமானங்களை இயக்குகிறது.
எனினும், யாழ்.பலாலிக்கும் சென்னைக்கும் இடையே சேவையை ஆரம்பிக்குமாறே அதிகளவான கோரிக்கைள் இருப்பதாகவும், IndiGo நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.