66
பாவம் நீங்கி
மானுடத்தின்
பாவங்களை அகற்ற
பவனி வந்தது
புனித ரமழான்
ஈமானின்
தேசத்தின்
இருட்திரை கிழித்து
இறக்கி விட்டேன்
புனித நோன்போடு
பசித்திருந்து
தாகித் திருத்து
விழித்திருந்து
தளரா மீட்சி
பெறவுள்ளோம்
எத்தனை இரவுகள்
அத்தனையிலும்
முத்தாய்ப்பாய்
விளங்கும்
புனித லைலதுல் கத்ர்
பெரும் அருட்கடாட்சம்
பசியறியாது
தாகமறியாது
பக்கத்து வீட்டார்
நிலையறியாது
வாழ்ந்த போதும்
வழிகாட்டும்
ஒளிவிளக்கு
எத்தனை தவறுகள்
பாவங்கள்
அத்தனையும்
துடைத்தெறிய
அணி கலனாய்
புனித ரமழான்
துஆக்கள்
ஏற்கப்படுகின்றன
நரகம் மூடப்பட
சுவர்க்கம்
திறக்கப்படுகிறது
இத்தனை நலம்பெற
இறைவன்
தந்த கொடையிது