தினகரனின் 92ஆவது பிறந்த தின நிகழ்வு லேக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. தினகரன் பத்திரிகையுடன் நெருங்கிப் பயணிக்கும் சமூகப் பணியாளர்களும், நீண்ட காலம் ஊடகத்துறையில் பணியாற்றிய ஊடகத் துறை சார்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர்
ஹரேந்திர காரியவசம் முன்னிலையில் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை ஒலிரப்புக்
கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் ஹாசிம் உமர், லேக் ஹவுஸ் வெளியீடுகளின் பிரதம ஆசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்களில், பி. பாலசிங்கம், பி. எக்மன் பிரியங்க, எம். ஏ. எம். தாஜுதீன், ஆனந்தி பாலசிங்கம், எம். எம். ஐ. ரஹ்மான் உள்ளிட்டவர்கள் தினகரன் 92 எனும் நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்
தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவுப் பணிப்பாளர் சி. பி. எம். சியாம், தேசமானிய எஸ் முத்தையா, தேசமானிய பி. பழனியப்பன், தேசமானிய டப்ள்யூ. எம். எம். எஸ். எம். கமால்தீன், பி. குமாரதாஸ், எம். சுந்தரமூர்த்தி, டப்ள்யூ எம். என். நஜீம், தேசமானிய வி. சிதம்பரநாதன், எம். எஸ். எம். பாஹிம். ஏ. பி. எம். ஹுஸைன், அவ்லர்டீன் முஹமட் அனஸ், நந்தினி மனோகரன், வைத்தியர் எச். எம். ஏ. டி. எம். விஜயசேகர, வைத்தியர் கே. டி. என். பிரசாத் ரணவீர. நடேசன் நாகேந்திரன், திருமதி சஹானா இன்பராசா, மோகனதாஸ் திபாகர், எழுத்தாளர் வணபிதா சரவணமுத்து பெனடிக் (பெனி) ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
vrm100_compressed