கிரேக்கம் பால்கன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அதன் நில எல்லைகளாக அமைந்திருப்பது வடக்கில் அல்பேனியா, மாசிடோனியா குடியரசு மற்றும் பல்கேரியாவும், கிழக்கில் துருக்கியுமாகும். உலகின் பத்தாவது நீளமான கடற்கரையை கிரேக்கம் கொண்டுள்ளது. அதேபோன்று, கிரேக்கம் பொதுவாக மேற்கத்திய நாகரிகத்தின் தொடக்கப் புள்ளியாக அறியப்படுகிறது. அத்துடன், ஜனநாயகத்தின் பிறப்பு கிரேக்கத்தில் நடைபெறுவதாக கருதப்படுகிறது.
மனித வளர்ச்சிக் குறியீட்டில் மிக உயர்ந்த நிலையில் உள்ள அபிவிருத்தி அடைந்த நாடான கிரேக்கம், 1981ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ளது. அது மாத்திரமின்றி, அதன் பொருளாதார மற்றும் சங்கத்தின் அங்கத்துவ நாடாக 2001ஆம் ஆண்டு முதல், இருந்து வருகிறது. 1952ஆம் ஆண்டிலிருந்து நேட்டோ அமைப்பினதும், 2005ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியினதும் அங்கத்துவ நாடாக உள்ளது. அதேபோன்று ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான அமைப்பு மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு ஆகியவற்றின் ஆரம்ப நாடாகவும் உள்ளது. ஏதென்ஸ் கிரேக்கத்தின் தலைநகராகும். மற்றைய முக்கிய நகரங்களாக தெசலோனிகி, ஹெராக்லியோன் மற்றும் லாரிசா ஆகியவை உள்ளன.
எவ்வாறாயினும் 2009ஆம் ஆண்டில் கிரேக்கம் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிய சந்தர்ப்பத்தில் உலகில் 18ஆவது செல்வந்த நாடாக இருந்தது. அவ்வாறான கடுமையான பொருளாதாரச் சரிவை பிராந்தியத்தில் உள்ள ஒரு நாடு எதிர்கொண்டிருப்பது ஏனைய நாடுகளுக்கு சிவப்பு விளக்கு எச்சரிக்ைக வழங்குவதைப் போன்றது. IMF கிரேக்கத்தின் பொருளாதாரத்தை மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதோடு, அதற்காக ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய மத்திய வங்கியும் பங்களிப்பை வழங்கின. இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து கிரேக்கத்துக்கு வழங்கிய கடன் உதவி நிதியின் அளவு 80 பில்லியன் யூரோவாகும். அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து முற்றாக வெளியேறுவதற்கு குறிப்பிட்ட காலம் எடுத்தது. இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கிரேக்கம் கையாண்ட உத்திகளைப் பற்றி பேசுவதற்கு முன்னர், அது எப்படி அந்த நெருக்கடியில் சிக்கியது என்பதை பார்க்க வேண்டும்.
2009இல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியோடு கிரேக்கத்தின் நெருக்கடியும் ஆரம்பமானது. அமெரிக்காவின் நிதித்துறையின் சரிவானது அமெரிக்காவுடன் அதிகம் இணைந்திருந்த நாடுகளை பெரிதும் பாதித்தது. குறிப்பாக உலகின் அனைத்து நாடுகளும் தொடர்புபட்டிருந்த நாடாக, அமெரிக்காவின் சரிவு உலக நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் தாக்கத்தைச் செலுத்தியது. எனவே, அந்த நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்தது. இதன்போது பொருளாதார ரீதியாக மிகவும் இணைந்திருந்த ஐரோப்பிய நாடுகளில் அது நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று, கிரேக்க நாட்டில் நெருக்கடி தோன்றுவதற்கு அது நேரடியாகவே காரணமாக அமைந்தது, அது ஐரோப்பிய யூனியனுடன் பங்காளி நாடாக இருந்ததனாலாகும்.
எவ்வாறாயினும் கிரேக்கத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகையானது யூரோவிலேயே வழங்கப்பட்டது. அப்போதும், கிரேக்கம் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் வாங்க வேண்டியிருந்தது. இலங்கை ரூபா மற்றும் டொலர்களிலும் கடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கிறது. எனினும் கிரேக்கம் அப்படிப்பட்ட ஒரு நாடல்ல. உள்நாட்டுக் கடன் மற்றும் வெளிநாட்டுக் கடன் என இரண்டு வகைகள் அங்கில்லை. அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் யூரோக்களில் செய்யப்படுகின்றன.
இந்தப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, கிரேக்கத்தின் கடன் சுமை வெகுவாக அதிகரித்ததைக் காண முடிந்தது. அதனால், அரசு கடன் பத்திரங்களை விற்பதன் மூலமும் கடன் தேடிக் கொள்ளல் இடம்பெற்றது. இந்த நெருக்கடியின் இடம்பெற்ற போது, சுமார் 350 பில்லியன் டொலர் கடன் தொகை அங்கிருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக எடுத்துக் கொண்டால் அது 100% ஐ விட அதிக தொகையாகும். இந்தக் கடன் தொடர்பான உண்மை நிலவரம் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னர், கடன் வழங்கிய நாடுகளிடம் அந்த நாட்டின் நம்பிக்கை உடைந்தது. அதன்போது கிரேக்கத்தால் கடனை அடைக்க முடியாமல் போனது என்ற கருத்து வெளிவரத் தொடங்கியது. கிரேக்கின் சரிவுக்கு இது ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதன்போது, கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவற்றை ஐரோப்பாவின் வங்கிகளிலேயே வைத்திருந்த ஏனையவர்கள், அவற்றை மீண்டும் கிரேக்கத்திற்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தனர். இதன் விளைவாக, கிரேக்கத்தின் கடன் பத்திரங்களின் விலை குறையத் தொடங்கியதோடு, வட்டி விகிதங்களிலும் குறைவு ஏற்பட்டது. 2012/ -2013ஆம் ஆண்டளவில், கிரேக்கத்தின் வட்டி விகிதம் 30% ஐ விடவும் அதிகரித்தது.
எனினும் ஐரோப்பிய வலயத்தில் வட்டி விகிதத்தை 3%க்கு மேல் உயர்த்த முடியாது என்ற நிபந்தனை அந்த நாடுகளுக்கு இடையே விதிக்கப்பட்டிருந்ததோடு, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை, எந்தளவு கடன் சுமை என்பது தொடர்பிலும், மற்றும் பணவீக்கம் தொடர்பிலும் இணக்கப்பாடுகள் காணப்பட்டன. அவ்வாறான இணக்கப்பாட்டின் பிரகாரம் ஐரோப்பிய வலயம் ஒன்றாக இணைந்துள்ளது. கிரேக்கத்தின் வட்டி விகிதம் 30%க்கு மேல் அதிகரித்த போது, அது முழுமையாக ஒப்பந்த மீறலாகும்.
இது நெருக்கடியின் உண்மையான நிலையாகும். எமது நாட்டின் கடன்களை அடைக்க முடியாமல் போனபோது, வெளிநாட்டுக் கடன் மீதி, டொலர்களில் வசூலான கடன் மீதி, சர்வதேசப் பத்திரங்கள் குறைந்தமை என்பன இடம்பெற்றன. டொலரின் கடன் பத்திரம் மிகவும் குறைந்தது. வட்டி விகிதங்கள் குறைந்தன. கிரேக்கத்தில் இருந்ததைப் போலவே நம் நாட்டிலும் இருந்தது.
எவ்வாறாயினும், கிரேக்கத்தின் வலிமைக்கு பல காரணிகள் பங்களித்தன. கிரேக்கம் ஒரு தனி நாடு அல்ல. கிரேக்கம் ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதே நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகள் பல உள்ளன.
அரசியல் ரீதியாக மாத்திரம் சில மாற்றங்களைச் சந்தித்தாலும், அவை ஒரே நாடாகவே இருக்கின்றன. அங்கு பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் திறந்த சந்தையில் நடைபெறுகிறது. மக்களின் பணத்தை அங்குமிங்கும் அனுப்ப முடியும். இந்நிலை கிரேக்கத்திற்கு பலமாக ஆகியது. இதே பிராந்தியத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் பலம் வாய்ந்த நாடுகளாக உள்ளன. அதேபோன்று, கிரேக்கத்துக்கு இரண்டாவது பலமாக மூன்று நிறுவனங்கள் ஆதரவை வழங்கின. அவை சர்வதேச நாணய நிதியம் IMF, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நிறுவனங்களாகும். இந்த மூன்று நிறுவனங்களும் அந்த நேரத்தில் கிரேக்கத்துக்கு ஆதரவாக நின்றன. அந்த நிறுவனங்கள் கிரேக்கத்துக்கு கடன் உதவியை வழங்கின. மேலும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளும் தீர்மானிக்கப்பட்டன.
அந்தத் தீர்மானங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளையும் அந்த நிறுவனங்கள் மேற்கொண்டன. எனவே, இந்த நெருக்கடியின் போது நடந்த ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த நாடு இலங்கையைப் போன்று நெருக்கடியான நேரத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த நேரத்தில், கிரேக்கத்தில் பெரிய அளவில் நெருக்கடிகள் எழுந்தன.
எவ்வாறாயினும், கடந்த 2023ஆம் ஆண்டாகும் போது இருந்த கடன் தொகை அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தினுள் கடன் வாங்குவது இன்னும் அதிகரித்ததேயாகும்.
எனினும் அதே நேரத்தில் கடன் நிலைத்தன்மையும் அதிகரித்துள்ளது. அதாவது, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அதிகரித்துள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு அமைய கிரேக்கத்துக்கு பொருளாதார ரீதியில் மீண்டு வருவதற்கு இது காரணமாக அமைந்தது. அதேபோன்று நிலவிய வட்டி விகிதமும் 30% மாக குறைவடைந்தது. கடன் பத்திர வட்டி விகிதங்கள் குறைந்தன. தற்போது, அமெரிக்காவை விட வட்டி விகிதம் குறைவாக உள்ளது. இருப்பினும், அந்தக் குறைவு சாதகமானதாக அமைந்தது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய நாடுகளுடன் இணையாக இருக்க வேண்டும் என்பதனாலாகும்.
இந்த நாட்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன. தொழிலாளர் சட்டங்கள், நீதி அமைப்பு போன்றவற்றைப் பற்றி குறிப்பாகப் பேச முடியாது. ஏனெனில் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது. எதிர்ப்பு வந்தாலும் அந்த நாடுகளால் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிந்தது.
எவ்வாறாயினும், அந்த நாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மக்கள் செய்த தியாகங்கள் ஏராளமானவையாகும். சம்பளம் அதிகரிக்கப்படாமை, பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை, ஓய்வூதியங்கள் நிறுத்தப்பட்டமை, சமூக நலத்திட்டங்கள் மற்றும் நிவாரணத் திட்டங்கள் நிறுத்தப்பட்டமை என்பவற்றோடு தனியார்மயமாக்கல்களும் இடம்பெற்றன. என்றாலும் அவ்வாறான மறுசீரமைப்புக்கள் பொதுவாக எந்த நாட்டில் இடம்பெற்றாலும் நாட்டு மக்கள் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பார்கள்.
இது கிரேக்கத்திற்கும் பொதுவான விடயமாகும். எனினும் அந்நாட்டு மக்களின் அர்ப்பணிப்பு, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க பெரும் உதவியாக இருந்தது.
எம். எஸ். முஸப்பிர்