சர்வதேச தேயிலை சந்தைக்கு எப்போதும் மிகவும் உயர் தரத்தில் தயாரிக்கப்பட்ட தேயிலையினை அனுப்பும் பிட்டிகல அத்துகோரள கூட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான அத்துகோரள தேயிலை தொழிற்சாலை 2024 மார்ச் 06ஆம் திகதி இடம்பெற்ற தேயிலை ஏல விற்பனையில் அத்துகோரள குறூப் சுப்பர் விற்பனை நாமத்தின் கீழான FBOPFEXSP ஒரு கிலோ தேயிலைக்கான அதிகூடிய விலையான (TOP PRICE) 5,950 ரூபாவினைப் பெற்றுக் கொண்டது.
லங்கா கொமொடிட் ப்ரோக்கர்ஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏல விற்பனையில் இத்தேயிலை UNI WORLD TEAS (PVT) LTD என்ற நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
ISO 22000:2018 / HACCP என்ற சர்வதேச தரச் சான்றிதழுக்கு அமைவாக முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த தேயிலைத் தொழிற்சாலையானது சிறப்பான விருதுகள் பலவற்றைப் பெற்றுக் கொண்டு சிலோன் டீ என்ற நாமத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்கு அதிகூடிய முயற்சியை எடுத்த ஒரு நிறுவனமாகும்.
ஓர்கானிக் தேயிலை (Organic Tea) எண்ணக்கருவிற்கு முதலிடத்தை வழங்கி அத்துகோரள தேயிலை, பிட்டிகல தேயிலை உள்ளிட்ட பல்வேறு வகையான தேயிலைகளை விலைக்கு வாங்குவதை தொழிற்சாலையின் www.athukoralagroup.com என்ற இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.
அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தேயிலையை சுவை பார்த்து சுதந்திரமாக விடுமுறையினைக் கழிப்பதற்கும், எமது பல்வேறு வகையான தேயிலைகளை வாங்குவதற்கும் தேயிலை விற்பனை நிலையம் ஒன்றையும், குருந்துவத்த விலா விடுமுறை இல்லத்தையும் நடத்திச் செல்வதாகவும் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான அனுர அத்துகோரள தெரிவித்தார்.
எம். எஸ். முஸப்பிர்