யாழ். வலிகாமம் வடக்கில் 33 வருடகாலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி இன்று ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படும்.
காங்கேசன்துறை தெற்கு , 235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணியும், வறுத்தலைவிளான் 241 கிராம சேவையாளர் பிரிவில் 23 ஏக்கர் காணியும், மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) 240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணி தொடர்பில் உரிமையாளர்களுக்கு, அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களால் இன்று யாழ். மாவட்ட செயலகத்துக்கு வருமாறு நேற்றே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
யாழ். விசேட நிருபர்