நாட்டின் கிழக்கு கரையோரத்தின் வனப்பை அனுபவித்து மகிழும் அனுபவத்தை உள்நாட்டவர்களுக்கு வழங்குவதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்கு Sun Siyam பாசிக்குடா விசேட சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆகக்குறைந்தது இரண்டு இரவுகள் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு சகல உணவு மற்றும் பானங்களின் மீது 20% விலைக்கழிவு, ஸ்பா சிகிச்சைகளில் 10% விலைக்கழிவு, அறைகள் வெற்றிடமாக காணப்படும் நிலையில், இலவசமாக அறை மேம்படுத்தல் வசதி மற்றும் முன்கூட்டிய check-ins மற்றும் தாமதமான check-outs போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
இந்த விசேட சலுகை 2024 மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை வழங்கப்படும் என்பதுடன், விருந்தினர்களுக்கு பாசிக்குடாவின் சிறந்த அனுபவத்தை சொகுசாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
பாசிக்குடாவின் செழுமையான கரையோரப் பகுதிகள் உலகப் புகழ்பெற்றவையாக திகழ்வதுடன், கிழக்கு பிராந்தியத்தின் கலாசார அம்சங்களையும் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த சலுகையை பயன்படுத்தி உள்நாட்டவர்களுக்கும், இலங்கையில் வதிவோருக்கும் சொகுசான தங்குமிட வசதிகள், சிறந்த உணவருந்தும் அனுபவங்கள் மற்றும் புத்துணர்வூட்டும் ஸ்பா சிகிச்சைகள் போன்ற வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். Sun Siyam பாசிக்குடா, சிறந்த உள்ளக வடிவமைப்புடன், செழுமையான வர்ணத் தெரிவுகளில் அமைந்த 34 இடவசதி கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட பெவிலியன்களைக் கொண்டுள்ளது.