எனக்குள்ளே என்னை
தொலைத்துவிட்டேன்,
நீண்ட நாட்களாக….
முகம் இருந்தும் தேடுகின்றேன்
உருவம் இல்லாமல்….
தொலைத்தது நானல்ல,
ஆனாலும்
தொலைக்கப்பட்டு விட்டேன்….
கேள்வி கேட்டால்,
பதில் புன்னகை மட்டுமே…
புன்னகைக்குள்
புதைக்கப்பட்ட என்னை
தேடுகிறேன் சில வேளை
நானாக இருந்து….
உன் அன்பு எங்கே..?
தொலைத்து விட்டேன்…
உன் அறிவு எங்கே..?
தொலைத்து விட்டேன்.
உன் ஆணவம் எங்கே..?
தொலைத்து விட்டேன்.
உன் கோபம் எங்கே…?
தொலைத்து விட்டேன்.
உன் உடை எங்கே..?
தொலைத்து விட்டேன்.
உன் நடை எங்கே..?
தொலைத்து விட்டேன்.
இப்படி அனைத்தையும் தொலைத்து,
எனக்குள் என்னை நானே தேடுகிறேன்.
என்னை நானே கண்டாலும்
இச் சமூகத்தில் வாழ மறுக்கின்றான்
எனக்குள் இருக்கும் நான்….
நடிப்பு அரங்கத்தில்
நானும் ஒரு நடிகனே..
நான் ஏற்ற பாத்திரம்
எனக்குப் பொருந்தா விட்டாலும்,
சமூகத்திற்கு நன்றாகவே
பொருந்துகின்றது….
என்னை போன்றே
ஒவ்வொருவரும் தம்மை
தாமே தேடுகின்றார்கள்…
இன்று அல்ல பல நாட்களாக.
எனக்குள்ளே என்னை தொலைத்துவிட்டேன்
62
previous post