அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும் அடையாளத்தின் மாதம் மலர்ந்துள்ள நிலையில், இந்த காதலர் தினத்தில் ஆடம்பரம் மற்றும் காலத்தால் அழியாத அழகின் நேர்த்தியுடன் பேராவலைத் திருப்திப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், தனித்துவமான ஊக்குவிப்பு சலுகைகள் மற்றும் புதிய தெரிவுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக வோக் ஜுவல்லர்ஸ் அறிவித்துள்ளது.
மிகவும் பிரபலமான OG (பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய தங்கம்) என்ற ஊக்குவிப்பு சலுகையையும் வோக் ஜுவல்லர்ஸ் பெப்ரவரி மாதத்தில் மீண்டும் முன்னெடுக்கின்றது. அந்த வகையில், 2024 பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் வைர நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்களின் ஜொலிக்கும் கொண்டாட்டத்தை வோக் ஜுவல்லர்ஸ் வழங்கியது.
OG (பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய தங்கம்) என்ற தனது பிரபலமான ஊக்குவிப்புச் சலுகையை மீண்டும் ஒரு தடவை 2024 பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை வோக் ஜுவல்லர்ஸ் வழங்குகின்றது.
இது மிகவும் விசேட விலையுடன், நீங்கள் உங்களுடைய பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய ஆபரணங்களை அல்லது தங்கப்பாளங்களைப் பெற்றுக்கொள்ள இடமளிப்பதுடன், ஒப்பற்ற பெறுமதி மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்பினை வழங்குகின்றது.
பழைய தங்க ஆபரணங்கள் அல்லது தங்கப்பாளங்களுக்கு பதிலாக புதிய மற்றும் தனித்துவமான, நேர்த்தியான ஆபரணங்களை வோக் ஜுவல்லர்ஸின் கைதேர்ந்த நகைக்கலைஞர்களின் அற்புதமான கைவண்ணத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.