Home » பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரர் டீ.ஆர்.விஜயவர்தன

பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரர் டீ.ஆர்.விஜயவர்தன

பெப்ரவரி 23ஆம் திகதி அமரர் டீ.ஆர்.விஜயவர்தனவின் பிறந்த நாளாகும்

by Damith Pushpika
February 18, 2024 6:37 am 0 comment

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஆனந்த திஸ்ஸ டி. அல்விஸ் இந்நாட்டு பத்திரிகைத் துறையில் முக்கியமான ஒருவராகவிருந்தார். இந்த இளைஞரான ஆனந்த திஸ்ஸ தனது இளமைக்காலத்தில் டீ.ஆர்.விஜயவர்தனவின் கீழ் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். லங்காதீப ஆரம்பமானது 1986ஆம் ஆண்டில் டீ.ஆர்.விஜயவர்தனவின் பிறந்த தினத்திலாகும். ஒரு எழுத்தாளராக ஆனந்த திஸ்ஸவுக்கு விஜயவர்தன தனது பத்திரிகையில் எழுதுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் 1990ம் ஆண்டில் ஆனந்த திஸ்ஸ, விஜயவர்தனவைப் பற்றிய தனது நினைவுகளை இவ்வாறு எழுதியிருந்தார்.

“மிகுந்த ஆச்சரியம். விஜயவர்தனவின் பத்திரிகை குழுமத்திற்குச் சவாலாக அன்று ஆரம்பிக்கப்பட்ட லங்காதீப சில காலத்தின் பின்னர் நின்று போனது. அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த லங்காதீப மீண்டும் ஆரம்பமானது “விஜய” பப்ளிகேசன் என்ற பெயரிலாகும். இது ஆச்சரியமானது என்பதோடு, இதனை விதியின் விளையாட்டாகக் கருத முடியும். மிகப் பெரிய பத்திரிகை நிறுவனம் மூன்று மொழிகளிலும் பத்திரிகையினை வெளியிட்ட விஜயவர்தனவை நான் எமது பத்திரிகை அடித்தாளமாகவே காண்கின்றேன். எனினும் நாம் மற்றொரு பக்கத்தை மறந்துவிட்டோம். அதுதான் அரசியல் சுதந்திரத்தை ஆழப்படுத்தத் தொடங்கிய வணிகங்களின் பின்புலத்திலிருந்து தேவையான பலத்தை வழங்கிய நபர் அவர் என்பதாகும்”

ஆனந்த திஸ்ஸ டி. அல்விஸ் டீ.ஆர்.விஜயவர்தனவின் எழுத்துலக நினைவுகளைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்.

“ஒரு தடவை நான் லேக்ஹவுஸ் நூல் நிலையத்தில் பணியாற்றும் போது எழுத்தாளர் ஒருவர் வந்து அதற்கு முன்னைய வாரத்தில் “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியான லண்டன் நகரில் உள்ள தகனக் கிரியை நிலைய திறப்பு விழா தொடர்பான செய்தியைக் கேட்டார். நான் பத்திரிகையை பல தடவைகள் பார்த்த போதும் அவ்வாறான ஒரு செய்தி பிரசுரமாகியிருந்ததை என்னால் காண முடியவில்லை என நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவரது பதில், “எம். டி. (மெனேஜிங் டிரக்டர்) அந்தப் பத்திரிகையில் அந்தச் செய்தி இருப்பதாகக் கூறினால் அச் செய்தி இருக்கவே வேண்டும்” என்பதாக இருந்தது. பின்னர் மீண்டும் கவனமாகப் பார்த்ததில் அந்தச் செய்தி பத்திரிகையின் ஒரு பக்கத்தில் கீழ் பகுதியில் தலைப்புக் கூட இல்லாமல் இரண்டு வரிகளில் பிரசுரமாகியிருந்ததைக் கண்டேன்.

விஜயவர்தனவுக்கு அவ்வாறான சிறப்பு நினைவாற்றல் இருந்தது. அவரது நினைவாற்றலைப் பற்றி ஏனைய பணியாளர்களிடத்தில் பெரும் நம்பிக்கை இருந்தது. இலங்கையில் இவ்வாறானதொரு தகனக் கூடத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டி ஆசிரிய தலையங்கம் எழுதும் வகையில் அந்தச் செய்தியைப் படிக்குமாறு ஆசிரிய தலையங்க எழுத்தாளருக்கு விஜயவர்தன அறிவித்திருந்தார்.

“நாம் அறியாத பல செய்திகளை எம். டி. அறிந்திருக்கின்றார்” அப்போது விஜயவர்தனவுடன் தினசரி கலந்துரையாடலுக்குச் சென்று வரும் பத்திரிகை ஆசிரியர்கள் அடிக்கடி பேசிக் கொள்வதைக் கேட்க முடிந்தது. அதற்குக் காரணம், அவர் ஒரு உண்மையான பத்திரிகையாளரைப் போன்று நாட்டின் மூலை முடுக்குகளில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதனாலாகும். ஆனந்த திஸ்ஸ டி. அல்விஸ் என்ற எழுத்தாளர் தன்னை ஒரு எழுத்தாளராக ஆக்கியதைப் பற்றி டீ. ஆர். விஜயவர்தனவுக்கு நன்றி தெரிவித்திருப்பது தனது முதலாவது வெளியீடான “யளி எளிவென்ன எபா” (மீண்டும் வெளிச்சமாக வேண்டாம்) என்ற புத்தகத்தில் என்பது இன்று அதிகமானோர் அறியாத ஒன்றாகும்.

இந்நாட்டில் வெளியீட்டில் ஈடுபடும் எழுத்தாளர் ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியது ஆர். பிரேமதாச என்ற இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதியாகவாகும். ஒரு எழுத்தாளராக தனது முதலாவது கட்டுரையை ஆர். பிரேமதாச எழுதியிருப்பது டீ. ஆர். விஜயவர்தன காலத்தில் சிலுமின பத்திரிகையிலாகும். அது ஹிக்கடுவை ஸ்ரீலால் லியனகே சிலுமினவின் ஆசிரியராகப் பணியாற்றிய காலமாகும்.

டி.ஆர். விஜயவர்தனாவின் 100வது பிறந்தநாள் நினைவேந்தலில் ஆர். பிரேமதாச அது பற்றி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்.

“சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை நிறுவனம் லேக்ஹவுஸ் பத்திரிகை குழுமமாக பிரமாண்டமான வெளியீட்டகமாக கட்டியெழுப்பப்பட்டது அவரால் மட்டுமே சாத்தியமானது. அவர் ஒரு சட்டத்தரணியாகத் தொழில் செய்து வந்தாலும், அந்தத் தொழிலால் அடையக்கூடிய பெருமையை அவர் நிராகரித்தார். அந்நிய ஆட்சியில் இருந்து தனது தாய்நாட்டை விடுவிக்க அக்கால விடுதலை கீதத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். தனது தாய்நாடு சுதந்திரம் அடைய உதவுவதில் அவரது நிறுவனம் மிகவும் பங்காற்றியது. அவர் முக்கியமானதாகக் கருதியது நிறுவனத்தின் அளவை அன்றி, ஆனால் அதன் தரத்தினையேயாகும். பத்திரிகை செய்ய வேண்டியது செய்திகளை வெளியிடுவது மாத்திரமல்ல. அது அறிவைக் கொண்டு வரும் மற்றும் பொதுமக்களுக்கு கல்வியை வழங்கும் ஊடகமாக அல்லது ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.

“பியசேன நிஸ்ஸங்க, மார்ட்டின் விக்ரமசிங்க, ஸ்ரீலால் லியனகே, டப்ளிவ். ஏ. சில்வா, மீமன பிரேமதிலக, ஹேமபால முனிதாச போன்ற மொழிகள், இலக்கியம், கலை தொடர்பில் போதிய அறிவு மற்றும் புரிந்துணர்வைக் கொண்ட பத்திரிகையாளர்களைத் தனது பத்திரிகையின் மூலம் அறிமுகப்படுத்தி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பத்திரிகை நிறுவனத்தினுள்ளேயும் அவரது சேவைகள் வெளிக் காட்டப்படும். சிலுமின பத்திரிகையானது பத்து சத பல்கலைக்கழகம் என்ற பெயரில் பிரபலமடைந்திருந்தது அதனால்தான்.

மார்ட்டின் விக்கிரமசிங்கவின் எழுத்துத் திறமையைக் கண்டு அவரை லேக்ஹவுஸில் டி.ஆர். விஜயவர்தன இணைத்துக் கொண்டார். விக்கிரமசிங்க முதன் முதலில் தினமினவுக்கு கட்டுரை எழுதியது 1916 ஜனவரி 21ம் திகதியாகும். “தாவரங்களும் விலங்குகளும்” என்ற கட்டுரையின் எழுத்தாளரது பெயர் மார்ட்டின் விக்கிரமசிங்க என்றில்லாமல், மலலகம எம்.டபிள்யூ. என்றே எழுதப்பட்டிருந்தது. அந்நேரம் விக்கிரமசிங்க மட்டக்களப்பில் ஒரு இளம் வர்த்தகராகும்.

தினமின பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்தபோது, விக்கிரமசிங்கவுக்கு முப்பது வயதாகும். அப்போது ஒரு சாதாரண பத்திரிக்கையாளர் பெற்றிருக்காத அளவு வாசிப்பனுபவமும், அறிவுச் செல்வமும் அவரிடத்தில் குவிந்திருந்தது. அத்தோடு, அவரிடத்தில் மனித வாழ்வு, உலகம் மற்றும் விலங்குகள் பற்றிய நிறைய அனுபவமும் இருந்தது.

டி.ஆர். விஜயவர்த்தனவின் பாத்திரத்தை மார்ட்டின் விக்கிரமசிங்கவின் தினமின பின்வருமாறு பதிவு செய்துள்ளது.

“இன்று பிரபலமிக்க எழுத்தாளராக இருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்க மட்டக்களப்பின் ஒரு இளம் வர்த்தகராகவே செயற்பட்டார். அந்தக் காலத்திலும் அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசித்து ஒரு கற்றறிந்த எழுத்தாளராக இருந்தார். கிராமத்தில் வேரூன்றியிருந்தாலும், நகர்ப்புற வாழ்க்கையும் அவருக்குப் பரிச்சயமில்லாததல்ல. மறுபுறம், மட்டக்களப்பில் கூட அவர் அரை நகர்ப்புற வாழ்க்கையையே வாழ்ந்தார். எனவே, நகரம் விக்கிரசிங்கவுக்கு பரிச்சயமில்லாத இடமாக இருக்கவில்லை. மறுபுறம், அவரது இளமையில், நகரம் இன்று போல் சிக்கலான மற்றும் மக்கள் அடர்த்தியாக வாழும் இடமாக இருக்கவில்லை. எவ்வாறாயினும், ஒரு பத்திரிகையாளனாக வாழ்க்கையைச் சம்பாதித்துக் கொள்வதற்காக இரண்டாவது முறையாக கொழும்பில் தங்கியிருப்பதற்கு வந்த விக்கிரமசிங்க கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் ஊசலாடும் வாழ்க்கையை வாழ்ந்தார். இது ஒருவித அரை தூக்கம் போன்றதாகும்.அவர் எந்த சித்தாந்தத்தையும் கடைப்பிடிக்கவில்லை என்றாலும், அவரது உலகக் கண்ணோட்டமும் அணுகுமுறையும் உண்மையில் பகுத்தறிவு பண்புகளால் வளர்க்கப்பட்டன.

மார்ட்டின் விக்கிரமசிங்க சிலுமின பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். டீ. ஆர். விஜயவர்தன பத்திரிகை ஆசிரியர்களைப் பற்றி தெரிவித்த கருத்துக்களை “பிறப்பிலிருந்து” என்ற புத்தகத்தில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விஜயவர்தன தனது பத்திரிகையின் மூலம் லியோனார்ட் வுல்பின் படைப்புகளுக்கு பாரிய விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதோடு நின்று விடாமல், லியனார்ட் வுல்பின் சேவைகளை ஒரு எழுத்தாளராக வழங்கி அவர் இந்நாட்டு மக்களிடையே எழுத்தாளராக பிரபலமடையச் செய்தது டி.ஆர். விஜயவர்தனவாகும். லியோனார்ட் வுல்ப் எழுதிய பத்தேகம என்ற புத்தகம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், லியோனார்ட் வுல்ப் இலங்கை பற்றிய மூன்று புத்தகங்களை வெளியிட்டார். டீ.ஆர்.விஜயவர்தனவின் மரணத்தையடுத்து இந்த மூன்று புத்தகங்களில் ஒன்று கூட சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

வஜிர லியனகே தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division