‘அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சம் புதிய பயனாளிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் கீழுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் மற்றும் ஆணையாளரான ஜயந்த விஜேரத்ன இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த முறை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் மீண்டும் இம்முறை விண்ணப்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாக இதன்போது கவனத்தில் கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.