இந்தியாவில் நிறுவப்பட்ட முன்னணி சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporation, உலகளாவிய ரீதியில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு தனது 55க்கும் அதிகமான வியாபார அப்ளிகேஷன்களினூடாக சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இலங்கை சந்தையில் 30% வருமான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.
Zoho Workplace, உற்பத்தித்திறனுக்கான ஒன்றிணைக்கப்பட்ட தொகுதிக்கட்டமைப்பு, Zoho CRM, வாடிக்கையாளர் முகாமைத்துவ தீர்வு மற்றும் ஆட்சேர்ப்பு கட்டமைப்பான Zoho Recruit போன்றவற்றுக்கான உறுதியான கேள்வி வளர்ச்சியுடன் உள்நாட்டு சந்தையில் சீரான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
உலகளாவிய ரீதியில் 100 மில்லியன் பாவனையாளர்கள் எனும் மைல்கல் இலக்கை எய்திய முதலாவது bootstrapped SaaS நிறுவனமாக Zoho திகழ்வதுடன், கடந்த ஆண்டில் நிறுவனம் 1 பில்லியன் வருடாந்த வருமானத்தை பதிவு செய்திருந்தது.
Zoho தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், புத்தாக்கமான தொழில்நுட்பத்தை வழங்குவது மற்றும் தமது வாடிக்கையாளர்களுக்கு SaaS தீர்வுகளுக்கு பெறுமதி சேர்க்கவும் உதவியாக அமைந்திருக்கும்.
இந்த ஆண்டில், உருவாக்க AI ஊடாக தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், Zoho இனால் தயாரிப்பு தீர்வுகள் வழங்கலில் குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது வியாபாரத் தேவைகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தல்களுடன், Zoho இனால் APAC மற்றும் இலங்கையில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.