தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தொடர்மனைகள் மற்றும் வணிக கட்டடங்களை நிர்மாணிக்கும் சொத்துகள் அபிவிருத்தி நிறுவனமான Bricks Developers (Pvt) Ltd. உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, கொழும்பு 3 இல் நிர்மாணிக்கப்பட்டுள்ள “தேர்ஸ்டன் 42” சொகுசு தொடர்மனையில் SLT-MOBITEL Fibre இணைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் SLT இன் நுகர்வோர் வியாபார ஆதரவு பொது முகாமையாளர் சுகத் ஆர்.டி சில்வா மற்றும் Bricks Developers (Pvt) Ltd. இன் தவிசாளர் சங்கர் சோமசுந்தரம் ஆகியோர் கைச்சாத்திட்டதுடன், இந்நிகழ்வில் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம், ஒவ்வொரு தொடர்மனை அலகுக்கும் fibre optic வலையமைப்பை SLT-MOBITEL நிறுவும். வதிவோருக்கு SLT-MOBITEL இன் Fibre புரோட்பான்ட் பக்கேஜ்களுக்கு பதிவு செய்து கொண்டு, 1 Gbps வரை அல்ட்ரா வேக இணைய அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். நவீன வாழ்க்கை முறைக்கு ஒப்பற்ற மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் தீர்வுகளை இது வழங்கும்.
SLT-MOBITEL Fibre இனால் அல்ட்ரா-உயர் வேக, குறைந்த தாமதம் மற்றும் அன்லிமிடெட் டேட்டா ஆகியன வழங்கப்படுவதால், வீட்டிலிருந்து பணியாற்றுதல், தொடர்ச்சியான வீடியோ மாநாடு, ஸ்ட்ரீமிங், ஒன்லைன் கேமிங் மற்றும் பல அம்சங்களுக்கு சிறந்த தெரிவாக அமைந்துள்ளது.