நிதி உள்ளடக்கத்தை வளப்படுத்தும் மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை நினைவுகூரும் முயற்சியில், NDB வங்கி தனது சமீபத்திய அம்சமான “NDB Remit Saver” (“ரெமிட் சேவர்”) ஐ டிசம்பர் 18 அன்று, பெருமையுடன் வெளியிட்டது. இந்த சேமிப்புக் கணக்கு, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை தேடுபவர்கள், ஏற்கனவே வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், நிரந்தர வதிவிடப் புலம்பெயர்ந்தோர் மற்றும் இலங்கையில் வசிக்கும் அவர்களது குடும்பங்களின் தனித்துவமான நிதித் தேவைகளையும் இது பூர்த்தி செய்கிறது.
NDB ரெமிட் சேவரின் தனித்துவமான அம்சம் அதன் அதிக போட்டித்தன்மை கொண்ட வட்டி விகிதமாகும். இலங்கை ரூபா 1,000 இற்கு அதிகமான நிலுவைகளிற்கான பொதுவான சேமிப்பு வட்டிவிகிதத்திற்கும் (தற்போது கவர்ச்சிகரமான 3.50 எனும் கவர்ச்சிகரமான வட்டிவிகிதத்தில் உள்ளது) மேலாக 1% இனை கூடுதலாக வழங்கும், இக்கணக்கானது தங்களது சேமிப்புக்களில் கணிசமான வளர்ச்சியை கண்முன்னே காண கணக்குரிமையாளர்களிற்கு ஒரு இலபாகரமான வழியை வழங்குகின்றது.
நிதி நலனுக்கான முழுதளாவிய அணுகுமுறையை கைக்கொண்டு, இக்கணக்கானது, பிரத்தியேகமான காப்பீட்டுத் திட்டத்தை உள்ளடக்குகின்றது.
ரெமிட் சேவர் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளரின் குடும்ப உறுப்பினர்ககளை – வாழ்க்கைத்துணை மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தை- இது உள்ளடக்குகின்றது.
கணக்கு உரிமையாளர் மணமாகதவராக காணப்படும் சந்தர்ப்பங்களில், முழு குடும்பத்திற்கும் விரிவான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பெற்றோர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். ரெமிட் சேவர்” ஐ அறிமுகப்படுத்தும் NDB வங்கி