‘அஸ்வெசும’ திட்டத்தை தாமதப்படுத்தும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தினார்.
மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக ‘அஸ்வெசும’ திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘அஸ்வெசும’ திட்டத்தை விரைவில் முன்னெடுத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு சில குழுக்களால் தாமதப்படுத்தப்படுவதாக தெரியவருவதால் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். ‘அஸ்வெசும’ நிவாரணம் கிடைக்காதோரின் முறைப்பாடுகளை முன்வைத்து, அத்திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.