சர்வதேச நாணய நிதியத்தில் நாட்டின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா? என்பதை கண்டறியும் பொறுப்பு தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் மற்றும் குழுவினர், இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த செயற்பாடுகளில் திருப்தியடைவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு அறிவித்துள்ளனர்.
விரயம், மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது சர்வதேச நாணய நிதியத்தால் (அரசு கண்டறிதல்) அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய பாத்திரமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நோக்கங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுமா? என்பதை பரிசீலிக்கும் இரண்டாவது மதிப்பாய்வு மார்ச் மாதம் நடத்தப்பட்ட பின்னர் மூன்றாவது தவணை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுமா? என்பதை கண்டறியும் பொறுப்பை இரண்டாவது மீளாய்வுவரை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் ஒப்படைக்க நிதியத்தின் பிரதிநிதிகள் குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி இரண்டாவது மீளாய்வின் போது, இலங்கையிலுள்ள திறைசேரியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விடயங்கள் தொடர்பிலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் பொறுப்பேற்பார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததுடன், அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் கையாண்ட ஜனாதிபதிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.