கல்வித்துறையை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னணி அறிவு முகாமைத்துவ நிறுவனமான TIIKM, அதன் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஒரு தசாப்தத்தின் கல்விச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய தாக்கத்தை வளர்ப்பதில் அதன் பங்கினை பெருமையுடன் நினைவுகூருகிறது. 2013 இல் நிறுவப்பட்டதிலிருந்து, புதுமையான முயற்சிகள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் உலகளவில் கல்விசார் நிபுணர்களை மேம்படுத்துவதில் TIIKM முன்னணியில் உள்ளது.
10வது ஆண்டு நிறைவு கொண்டாட்டமானது ஒரு தசாப்தத்தின் ஆழமான சாதனைகள், மூலோபாய கூட்டாண்மை மற்றும் கல்வித்துறையை மாற்றியமைக்கும் பங்களிப்புகளை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். TIIKM அதன் உலகளாவிய வலைப்பின்னலான கல்விசார் ஒத்துழைப்பாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள் நிறுவனத்தின் பயணத்தை வடிவமைப்பதிலும், உலகெங்கிலும் உள்ள கல்விச் சமூகங்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கல்வித்துறையில் அதன் அர்ப்பணிப்புக்கு ஏற்ப, TIIKM ஆனது சமீபத்தில் Alpha One 2023 விருது வழங்கும் விழாவை பெருமையுடன் நடத்தியது, அதன் ஊழியர்களின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவித்தது. மதிப்புமிக்க விருதுகளில், தேஷானி பத்திரன TIIKM மாநாடுகளுக்கான ஆண்டின் சிறந்த பணியாளராக கௌரவிக்கப்பட்டார், மேலும் ஏஞ்சலாமகேந்திரன் TIIKM நிகழ்வுகளுக்காக ஆண்டின் சிறந்த பணியாளர் என்ற மதிப்பிற்குரிய பட்டத்தைப் பெற்றார்.