யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டிலிருந்து 19 இலட்சம் ரூபா வழங்கப்பட்டமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் யாழ். நகரிலுள்ள 2 புடைவைக் கடைகள் தீயில் நாசமாகியதுடன், கடைக்குள்ளிருந்த சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஆடைகள் மற்றும் பொருட்கள் தீயில் நாசமாகின. கடைகள் எரிந்து சில நாட்களில் காரொன்று எரிக்கப்பட்டதுடன், மற்றொருவரின் மோட்டார் சைக்கிளொன்றும் பறித்துச் செல்லப்பட்டது. இக்குற்றச்செயல்கள் தொடர்பாக யாழ். பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இம்மூன்று சம்பவங்களுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை நேற்று முன்தினம் (19) பொலிஸார் கைது செய்ததுடன், இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் வாளொன்றையும் கைப்பற்றினர். இச்சந்தேகநபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்ட போது, பிரதான சந்தேகநபரின் பெரியம்மா முறையான பெண்ணொருவர் பெல்ஜியத்தில் வசிப்பதாகவும் அவரூடாக பரீட்சையமான நபரொருவர், யாழ். நகரிலுள்ள 2 புடைவைக் கடைகளுக்கு தீ வைக்க 12 இலட்சம் ரூபாவும் வாகனங்களுக்கு தீ வைக்க 7 இலட்சம் ரூபாவும் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
(யாழ். விசேட நிருபர்)
யாழ். நகரில் கடைகள், வாகன எரிப்பு
நாசகார செயல்களை அரங்கேற்ற பெல்ஜியத்திலிருந்து ரூ.19 இலட்சம்
151
previous post