இனியில்லை எதுவும்
இத்தோடு
முடிந்துவிட்டது என்று
தத்தளிக்கும் நிலையில்
துடுப்பிழந்து
துடிக்கும் இதயம்
கைக்கும் வரும்
என்று பயந்து
கடல் நடுவே
கடல் ஆழத்தின்
கருமைக்கு
இரவின் இருள்
துணை சேர
படகில் நானும்
கரை முகம் காண
பயத்தில்
திக்கும் தெரியா
தவிக்கும் நேரம்
காற்றுக்கும் திசை
மறந்து எல்லாம்
ஒரே திசை என
சூழன்றடிக்க
தூரமே தெரிந்த
உன் முகம் பார்த்தேன்
கரையேறுவேன்
என்ற நிச்சயம் இல்லை
என்றாலும்
மூழ்கமாட்டேன்
எனும் திடம் தந்தாய்
முடிந்த ஆண்டிற்கு
காற்புள்ளியிட்டு
தொடங்கிய
ஆண்டில்
காலடிவைத்து
நீந்தி வருகிறேன்
கரை
காணவில்லை கரை
ஓரமாய் தனியே
நின்றிருக்கும்
உனை மட்டும்
கண்டவளாய் நீந்தி
வருகிறேன்…
காண்பதுவோ
கானல்
என்றிட வேண்டாம்
நானோ
இருப்பது
பாலையில்லை
நம்புங்கள்…
நான் ஆழ்கடல்
இருக்கிறேன்…