செல்வந்தர் வயிறு புசிக்கும்
சிறப்பா யது பெருக்கும்
ஏழைக ளிதயம் சகிக்கும்
எளிமையை யது ருசிக்கும்
சாராயக் கடைகள் பெருகும்
சந்தோச மதால் குறையும்
பேராசை நெஞ்சில் நிறையும்
பேராபத்துக ளதில் உறையும்
சாலையில் சண்டைகள்
நடக்கும்
சமத்துவத்தை யவை
உடைக்கும்
கல்விச் சாலைகள் பல
முளைக்கும்
கல்வியை காசுக் கவை
விற்கும்
அரசியலை ஆணவம் ஆளும்
அசுத்த மதனுடன் சேரும்
அறிவை செல்வம் வெல்லும்
அடிமைத் தனம்
குடி கொள்ளும்
ஒழுக்கம் எரிந்து போகும்
உயர்வுக ளதில் வீழ்ந்து சாகும்
அழுக்குகள் வந்து மோதும்
அகிலமே யதில் மூழ்கும்
நான்கு சுவர்கள் விரியும்
நடப்ப தெல்லாம் தெரியும்
ஊனக் கண்கள் திறக்கும்
உயர் மானமெழுந்து
பறக்கும்
மடமை அரியணை யேறும்
முடுமை புவிதனை யாளும்
கடமை கைதவறி போகும்
காசினியே கந்தலென ஆகும்
பணக்கார முதலைகள்
மிகையாகும்
பண்பான உயிர்களவை
வதைக்கும்
பணத்திற்கு ளெல்லாம் வீழும்
பாசம் வெந்தணலில் வேகும்
பெண்மை பெருமையை
இழக்கும்
பெரும் ஆடையை யது
குறைக்கும்
ஆண்மை உழைப்பை
வெறுக்கும்
அடுத்தவரை யது
கருவறுக்கும்
உலகம் இப்படியே மாறும்
உணர்வுள்ளோர்
மனம் நோகும்
அளவுடன்
எல்லாம் வேண்டும்
அப்போதுதான்
அமைதி தோன்றும்
–
வரக்காமுறையூர் ராசிக்