79
–புத்தொளி வீசிடும்
பொங்கலே வருக
இத்தரை செழித்திட
இன்பத்தைத் தருக
மற்றோரை மதித்திடும்
மனிதத்தைத் தருக
கற்றோரும் மிகைத்திடும்
உலகைத் தருக
மத்தாப்பு ஒளியால்
மண்ணும் மின்னவே
தித்திக்கும் மகிழ்வால்
உள்ளமும் துள்ளவே
எட்டுத் திக்கும்
ஐக்கியம்
பெருகவே
எட்டு வைத்திடு
இன்பப்
பொங்கலே
புத்தரிசி எடுத்தே
புதுப்பானையில்
இட்டே
பாலுடன் சீனியையும்
பக்குவமாய்க் கலந்தே
எரியும் நெருப்பில்
எடுத்தே வைத்திட
பாலும் வழிந்தே
பொங்கல் சிறக்குமே
புத்தாடை
அணிந்தே
பூலோகம்
மணக்கும்
பூசிடும்
மருதாணியும்
பூத்தே சிவக்கும்
உறவுகள் சேர்ந்திட
உன்னதம் பூக்கும்
உழவன் தியாகமும்
உலகை
வியக்கும்..!