வீரகேசரி நாளிதழ் மற்றும் வீரகேசரி வார இதழ் ஆகியவற்றின் பிரதம ஆசிரியரான எஸ்.ஸ்ரீகஜனின் மாமியாரும் சக்தி தொலைக்காட்சியின் முன்னாள் ஊடகவியலாளர் சூரியபிரபாவின் தாயாருமான திருமதி சாந்தாதேவி சூரியமூர்த்தி அம்மையார் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அன்னாரின் பூதவுடல் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி முதல் இரவு 8.00 மணிவரையும் அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை (16) காலை 9.00 மணி முதல் கொழும்பு, பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அன்றையதினம் மாலை 3.00 மணிக்கு ஈமக்கிரிகைகள் இடம்பெற்று, பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுமென, குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த இவர், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
164
previous post