நுண்நிதிக் கடன் திட்டங்களை ஒழுங்குபடுத்துவது அத்தியாவசியமான விடயமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிராமிய மட்டத்தில் காளான்கள் போன்று நுண்நிதி நிறுவனங்கள் முளைத்துள்ளதாகவும், மிகவும் கவர்ச்சிகரமான முறையில் கடன்களை வழங்குவதாகவும், அதிக வட்டி விகிதங்களை அறவிடுவதாகவும் கூறி, மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதாக கோகிலா குணவர்த்தன எம்.பி பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்து பேசும்போது தெரிவித்தார். பிரேரணையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியதாவது: “மைக்ரோ ஃபைனான்ஸ்” கடன் வாங்கிய பிறகு பெண்களும் குடும்பங்களும் நிர்க்கதியாகி விடுவதாக செய்திகள் வருகின்றன. பதிவு செய்தவர்களும் உண்டு. இல்லாதவர்களும் உண்டு. பெண்களுக்கு கடன் வழங்குவதன் மூல மக்களின் வாழ்வு அழிக்கப்படுகிறது. நுண்கடன் கொடுப்பவர் கிராமத்தில் மீட்பர் போல் நடந்து கொள்கிறார். அவர்களுக்கு எளிதான வழியில் கடன் வழங்குவதற்காக சங்கங்களை உருவாக்குவதன் மூலம் இந்த பெண்கள் கடன் வலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கடனை அடைக்க முடியாமல் போனால் உயிரைக் கொடுத்துவிடுகின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலை. தற்போது முகநூல் மூலமும் கடன் வழங்கப்படுகிறது. கவர்ச்சிகரமான முறையில் இந்த கடன் வழங்குவது போன்று நடந்து கொள்கிறார்கள். ஆனால் திரும்பிப் பார்த்தால், இந்தக் கடன் 200 முதல் 300 சதவிகிதம் ஆண்டு வட்டியில் வழங்கப்படுகிறது. சமுர்த்தி வங்கியின் ஊடாகவும் நுண்கடன்கள் வழங்கப்படுகின்றன அவர் தெரிவித்தார்.
பல நுண்நிதி கடன் நிறுவனங்களால்
கிராமப்புற பெண்களுக்கு அதிக வட்டிக்கு கடன்கள்
ஒழுங்குபடுத்தல் அவசியம் -கோகிலா MP
163
previous post