வேலியின் முட்டுக் கட்டை அல்ல
சோதனைகளும் வேதனைகளும்
வேதாந்தம் பேசிடும் காலம் இது
வேஷங்களோ ஆயிரம்
கஷ்டமோ நஷ்டமோ
கண்காணிப்பு இல்லையென்றால்
காரணம் கூறுவதில் பயன் இல்லை
கல்லாய்ப் போன மனிதர்களால்
விதி என்று தலையாட்டினால்
சதி செய்யத்துடிப்போருக்கு
சந்தர்ப்பமகாலாம். ஆனால்…
உன் மதியைக் கொண்டு முன்னேறு
எல்லாவற்றிக்கும் எல்லோரிடமும்
மௌனியாகவே இருக்காதே…
பேசு மனம் திறந்து
கவலைகளை மறந்து
சிறகு விரித்த பறவை
தேடிய தன் உறவை
காத்திருந்தால் உன் வரவை
எத்தனையோ தடவை
அறிவுரை சொல்வதும் பிடிக்காது
குறி வைப்பதும் தவறாது
தறி கெட்டுப் போவதும்
பறி கொடுத்த மன வேதனையோ
ஆழ்ந்த சிந்தனை
அசைந்தாடும் முந்தானை
உன்மடியோ தலையணை
ஆறுதல் சொல்லும் அன்னை
வறுமையும் ஒரு கொடுமைதான்
பொறுமையும் பொக்கிஷம் தான்
திறமையோ தீர்வைத் தரும்
பொறாமை இல்லாத பட்சத்தில்
வரையறை மீறாத போது
நிறை குடம் தளம்பாது
இறையருள் இருப்பதால்
காலமும்இப்படியே இருக்காது
உன்பாரமோ குறைந்து போகும்
எதற்கும் துணிந்து நில்
உன்னை நீயே உனக்குள்ளே
வருத்திக் கொள்ளாதே.