இலங்கையின் ஹஜ் மற்றும் உம்ரா சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் தனது புதிய இலச்சினையை அறிமுகம் செய்துள்ளது.
குறித்த அறிமுக நிகழ்வு கொழும்பில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஹஜ் மற்றும் உம்ரா சேவை வழங்குவதில் கடந்த 6 வருடங்களாக தனக்கான ஒருவழியில் யாத்திரியர்களின் அமோக ஆதரவுடன் நாடளாவிய ரீதியில் சேவையை வழங்கும் ஒரே ஒரு நிறுவனம் என்பதில் பெருமிதம் கொள்கின்றது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இலச்சினை, ஒரு விமானத்தின் ஜன்னல் பகுதி இருப்பதுடன், அது ஆங்கில எழுத்து யூ வடிவத்தையும், அந்த ஜன்னலுக்குள் இருந்து பார்க்கும் போது விமானத்தின் பின் பகுதி போன்ற வடிவமைப்பு ஆங்கில எழுத்து “டி” வடிவத்தை கொண்டுள்ளது. இலச்சினையின் தோற்றத்தில் பல வர்ணங்கள் அடங்கியுள்ளன. அந்த நிறங்கள் ஒற்றுமை, அரவணைப்பு, அன்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது.
யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவேட்) லிமிடெட் சர்வதேச தரத்தில் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, தனது சேவையை வழங்கி வருவதுடன், கடந்த பல வருடங்களாக இலங்கை மக்கள் மத்தியில் ஹஜ் மற்றும் உம்ரா சேவையில் அபிமான நம்பிக்கையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அறிமுக நிகழ்வில், நிறுவனத்தின் ஊடாக சேவையை பெற்றவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவித்தமை நிறுவனத்தின் தரம், தனித்துவம் சிறப்பு மற்றும் புத்தாக்கம் என்பனவற்றை எடுத்து காட்டுகின்றது.