இலங்கையில் முன்னணி திரவப் பெற்றோலிய வாயு விநியோகஸ்தரான லிற்ரோ காஸ் லங்கா நிறுவனம், பாடசாலை மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுத்த விழிப்புணர்வுத் திட்டமான ‘நாளையைப் பாதுகாக்கும் எமது பிள்ளைகள்’ திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தது. இத்திட்டமானது நாடு முழுவதிலும் உள்ள 264 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதுடன், திரவப் பெற்றோலிய வாயுவைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்து அறிவூட்டுவது இதன் நோக்கமாகும்.
திரவப் பெற்றோலிய வாயு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அதன் பாதுகாப்பான பயன்பாட்டுக் கலாசாரத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தி அதன் ஊடாக இறுதியில் அவர்களுடைய குடும்பங்களைத் தெளிவூட்டுவது ‘நாளையைப் பாதுகாக்கும் எமது பிள்ளைகள்’ திட்டத்தின் நோக்கமாகும். இதன் இறுதிப் போட்டியில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெஹான் சேமசிங்க, சாகல ரத்னாயக்க மற்றும் லிற்ரோ தலைவர், முகாமைத்துவம் மற்றும் பணியாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய லிற்ரோ காஸ் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிடுகையில், “இந்தத் திட்டம் வெற்றிகரமாகப் பூர்த்தியடைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.