கொழும்பு நகரிலுள்ள 05 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட 05 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகருக்குள் வருகை தரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இவ்விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இப்பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.