இந்தியாவிலிருந்து மேலும் 06 மில்லியன் முட்டைகளுடன் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த முட்டைகள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியாக உள்ள சதொச வர்த்தக நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். இதேவேளை, வற் வரி அதிகரிப்பினூடாக தங்களது உற்பத்தி செலவு அதிகரிக்கா விட்டால் எதிர்வரும் மாதங்களில் முட்டை ஒன்றை 30 ரூபா முதல் 35 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய முடியுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.