Home » யாழ். போதனா வைத்தியசாலை தேவைகள் குறித்து பேசப்படும்
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது

யாழ். போதனா வைத்தியசாலை தேவைகள் குறித்து பேசப்படும்

அபிவிருத்திக்குழு கலந்தாராய்வில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

by Damith Pushpika
December 24, 2023 6:50 am 0 comment

வடக்கு மாகாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் விஜயம் செய்யவுள்ள நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பான முக்கிய விடயங்களை அடையாளப்படுத்தி அறிக்கையொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சாதகமான முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (22) விஜயம் செய்த அமைச்சர், வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெற்ற வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக சபையினருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் கலந்துரையாடினார்.

வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை மற்றும் அதனை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், வைத்தியசாலையில் கட்டட வசதியின்மை பாரிய பிரச்சினையாக காணப்படுவதால், தற்போது கட்டப்படும் 6 மாடி கட்டடத்தொகுதி வேலையை பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் 800 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதுடன், தற்போது 400 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் 400 மில்லியன் ரூபா தேவைப்படுவது தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன், புதிதாக காணிகளை கொள்வனவு செய்து வைத்தியசாலையை விரிவுபடுத்த வேண்டிய தேவை தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

தட்டுப்பாடாகவுள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தல், ஆய்வுகூட வசதியை விஸ்தரித்தல், தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கு பிரிவொன்றை உருவாக்குதல் தொடர்பாக ஆராயப்பட்டன.

வெளிநோயாளர் பிரிவு சேவை நேரத்தை அதிகரித்து மக்களுக்கான சேவையை விஸ்தரித்தல், வைத்தியசாலை வளாகத்தை சுற்றி அமைந்துள்ள கழிவுநீர் வடிகான்களை சுகாதார முறைப்படி பேணுதல் உட்பட பல்வேறு நிவர்த்தி செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

யாழ். விசேட, பருத்தித்துறை விசேட நிருபர்கள்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division