56
காசா போர்
கண்ணீர்
இரத்தம் ஆனது
குழந்தை இரத்தத்தில்
எழுதி பழகும்
கொடூரம் இங்கு
நடக்கின்றது
அழக்கூடத் தெரியாத
மழலைகள் மீது
அணுகுண்டு விழுகின்றது
பூக்களுக்கு தீ வைத்து
போர் என்று பேர் வைத்து
அடுத்த தலைமுறை
சீரழித்து அழித்து
குழந்தைகள் விழுவதை
எந்த மனமும் விரும்பாது
இங்கு கொத்து கொத்தாய்
செத்து
விழுகின்றன தளிர்கள்
போதும் போதும்
இந்த ரணம்
வேண்டாம் வேண்டாம்
இது போன்று தினம்
வரும் செய்திகளால்
செத்துப் போகின்றது
எங்கள் மனம்
மழலைகளை கொல்வதை
நிறுத்துகள் வரும்
விடியலிலாவது மனிதம்
நேசிக்கும் மனிதனாக
மாறுங்கள்….
எங்கள் கண்ணீர் எல்லாம்
ரத்தம் ஆகவே விழுகின்றது