57
கனவுகளைச் சுமந்தாயே
கதியென்று வந்தாயே
வந்தாயே என்னுள்ளே
வசந்தமும் தந்தாயே
தந்தாயே மெய்யன்பு
தழுவியெனை வென்றாயே
வென்றாயே மழையிரவை
கதகதக்கும் விண்மீனே
விண்மீனே விடிந்தாலும்
என்னுள்ளே நின்றாயே
நின்றாயே என்றென்றும
நெஞ்சூறும் செம்மொழியே
செம்மொழியே சீரழகே
சிறக்கின்றேன் இந்நாளே
இந்நாளே இதயத்தில்
சிறகுகளும் உன்னாலே
உன்னாலே கண்டேனே
உதயத்தின் கனவுகளை
கனவுகளைச் சுமந்தாயே
கதியென்று வந்தாயே