மலையகம் 200 மலையக மக்களின் வலியும் வாழ்வும்’ என்ற ரீதியில் லண்டனில் இயங்கும் ‘விம்பம்’ அமைப்பினர் சிறுகதை, ஓவிய, கட்டுரைப் போட்டிகளை நடாத்தினர். இப்போட்டிகள் நடந்து முடிந்து மிகக் குறுகிய காலத்திற்குள் அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 50000.00, 30000.00, 20000.00 என்ற ரீதியில் பணப்பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு, தெரிவுசெய்யப்பட்ட 10 ஆக்கங்களுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் 10000.00 பணப்பரிசும் வழங்கப்பட்டது. போட்டி முடிவுகளின் படி சிறுகதைப் போட்டியில் முதல் 3 இடங்களை தவமுதல்வன் (தமிழ்நாடு), எம். மகேந்திரன் (பொகவந்தலாவ), பிரமிளா பிரதீபன் (வத்தளை) ஆகியோர் பெற்றனர். அதேபோல் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசை தவச்செல்வன் சுப்ரமணியம் (டிக்கோயா), திருமதி. சந்திரகுமார் தமயந்தி (ஹட்டன்), சிவனு இராஜேந்திரன் (கொட்டகலை) மூவரும் தட்டிச்சென்றனர். ஓவியப் போட்டிகளில் முதல் இடத்தினை . ஜே. தங்கேஸ்வரன் (புசல்லாவ), திருமதி. சு.மு.ளு. குரே (பேராதனை), இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை திருமதி. ஹமீரா ராஜீவ் (அக்கரைப்பற்று), திமோத்தி பிரான்ஸிஸ் (ஹட்டன்) ஆகிய இருவரும் தட்டிச்சென்றனர்.
மலையக மக்கள் மலைகள் சூழ்ந்த இப்பிரதேசத்தின் பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் எப்படி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த அடிமைச் சமூகத்தின் யதார்த்தத்தினை முழுமையாக உணர்த்தும் முகமாக வரையப்பட்டு, போட்டிக்காக அனுப்பப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் மலையக மக்களின் 200 ஆண்டுக்கால வாழ்வியல் நிலைகளை விளக்கும் முகமாக பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சியை விம்பம் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். இவ் ஓவியக் கண்காட்சி கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரை இலங்கையின் பல பாகங்களிலும் நடத்தப்பட்டன.
சந்திரகுமார் தமயந்தி